பக்கம்:வாழ்க்கை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

வாழ்க்கை


உண்மையான அன்பே வாழ்க்கை ; அன்புடையோனே வாழ்பவன்.

கிறிஸ்து நாதரின் கொள்கைப்படி, அன்பே வாழ்க்கை. அவ் வாழ்க்கை அறிவுக்குப் பொருத்தமில்லாத, துயரம் நிறைந்த அழியும் வாழ்க்கையன்று ; ஆனால், நித்தியமான இன்ப வாழ்க்கையாகும். அன்பு அறிவினால் கற்பனை செய்யப் பெற்றதன்று ; அது ஒரு செயலின் விளைவன்று ; அதுவே செயலாகும், நம்மைச் சூழ்ந்துள்ள வாழ்வின் மிகவும் இன்பகரமான செயல் அன்பே. குழந்தைப் பருவத்திலிருந்து நாம் இதை உணர்ந்திருக்கிறோம். ஆனால், பின்னால் உலகின் போலிப் போதனைகளால் இதை நாம் உணர முடியவில்லை. குழந்தைப் பருவத்தில் இன்பகரமான இந்த உணர்ச்சி நம்மைச் சுற்றியிருக்கும் சகலரையும் தந்தை, தாய், உடன்பிறந்தோர், நல்லவர்கள், கெட்டவர்கள், பகைவர்களோடு, நாய், குதிரை, புல்லின் பசுமையான இதழ் ஆகியவைகளைக்கூட நேசிக்கும் படி செய்திருக்கிறது. எல்லோரும் நன்றாயிருக்க வேண்டும், எல்லோரும் இன்பமாயிருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நடந்து கொள்ளும்படி நம்மைச் செய்வித்திருப்பதும் இதுதான். எல்லோரும் இன்பமாயும் திருப்தியாகவும் இருப்பதற்காக நம்மையே தியாகம் செய்வதுதான் அன்பு. இதில் தான் மனித வாழ்க்கை இருக்கிறது.

இந்த அன்பு மனித ஆன்மாவில் தளிர்விட்டு வளரும் பொழுது, இதைச் சுற்றி வேறு காட்டுச் செடிகளும் வளர்கின்றன. அவைகளையே அன்பென்று கொண்டு நாம் உண்மையான அன்புச் செடியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/115&oldid=1122198" இலிருந்து மீள்விக்கப்பட்டது