பக்கம்:வாழ்க்கை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

வாழ்க்கை


தனி வாழ்வு முடிவில் அழிவடைகிறது. எது நிலையற்றது என்று தோன்றுகிறதோ, அந்த மக்களின் வாழ்வு நிலைத்து நிற்கிறது. மனிதன் நசித்துப் போகிறான்; ஆனால், மனித சமுதாயம் சிரஞ்சீவியா யிருக்கிறது. தனி மனிதனுடைய வாழ்க்கை என்பது மாயை; அவனுக்கு வெளியேயுள்ளதே உண்மையான வாழ்க்கை. ஆயினும், மனிதன் வெளியேயுள்ள மற்றவர் வாழ்க்கையைப் பற்றி அக்கறை கொள்வதில்லை; கவனிப்பதில்லை தெரிந்து கொள்வதுமில்லை!

வாழ்வில் மனிதன் எவைகளை விரும்புகிறானோ அவைகள் அவன் பார்த்து கொள்ளாத வெளியிலுள்ள மக்களின் வாழ்க்கையில்தான் அமைந்திருகின்றன. இந்த உண்மை அவனுக்குப் புலனாகி விட்டாற்போதும், அல்லது பிறர் இதை அவனுக்கு விளக்கி யுரைத்துவிட்டாற் போதும் - இதை அவன் கைவிடவே முடியாது. இது அவன் உணர்விலிருந்தும் அழியாது.

ஆன்றோரின் அமுத வாக்கு

மானிடன் தன் இன்பமே வாழ்வின் லட்சியம் என்று முதலில் எண்ணுகிறான். ஆனால் கானல் நீர் போன்ற அந்த இன்பம் ஏற்படும்போது, அதை அநுபவிக்க முடியாதபடி அவனுடைய தனி வாழ்வு, ஒவ்வொரு நிமிஷமும், மூச்சு விடுந்தோறும், துன்பம், தீமை, மரணம், அழிவு ஆகியவைகளை நோக்கியே போய்க்கொண்டிருக்கின்றது! இது இளைஞர் முதியோர் யாவருக்கும் தெரிந்ததுதான் ; படித்தோரும் பாமரரும் இதை அறிவர். பண்டைப் பழங் காலத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/13&oldid=1123787" இலிருந்து மீள்விக்கப்பட்டது