பக்கம்:வாழ்க்கை.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
123
 

பெற்றிருப்பதாலே ஒருவருக்கும் மற்றவர்களுக்கும். வேற்றுமை தெரிகிறது.

இந்த விருப்பம், அல்லது ஆசை, அல்லது அன்பு காலத்தையும் இடத்தையும் பொறுத்ததன்று; உடலைப் பொறுத்ததன்று; உடல் தோன்றுமுன்பே இது இருப்பது. என் விருப்பத்திற்கு இயைந்த முறையில் நான் இந்த உலகத்தோடு சில சம்பந்தங்களைப் பெற்றிருக்கிறேன்; இது போலவே மற்ற மனிதர்களும் வேறுவித சம்பந்தங்களைப் பெற்றிருக்கின்றனர். மக்களோடு நெருங்கிப் பழகுவதில் நாம் வெளித் தோற்றங்களையே பார்த்துக் கொண்டிருப்பதில்லை. அவர்களின் சிந்தனைகள், விருப்பங்களையே அறிய முயற்சிக்கிறோம். அவைகளைக் கொண்டு அவர்கள் உலகத்தோடு எத்தகைய சம்பந்தம் கொண்டிருக்கின்றனர் என்பதை அறிகிறோம். அவர்கள் எவைகளை விரும்புகிறார்கள், எவைகளை விரும்பவில்லை என்பதிலிருந்து அவர்களின் தன்மையை அறிய முடிகிறது.

இது போலவே குதிரை, நாய், பசு முதலிய விலங்கினங்களின் இயல்பையும் அறியலாம். விலங்குகளில் ஒவ்வோர் இனமும் வெவ்வேறு விருப்பங்களைக் கொண்டிருப்பதை ஆதாரமாக வைத்துக் கொண்டு, சிங்கங்கள், மீன்கள், குதிரைகள் என்று இனங்களை நாம் பிரித்துப் பார்க்கிறோம். எனவே, ஒவ்வோர் இனமும் உலகத்தோடு என்ன சம்பந்தம் பெற்றிருக்கிறது- எதை விரும்புகிறது, எதை விரும்பவில்லை - என்ற ஆதாரத்திலேயே பகுத்துப் பார்க்க முடிகிறது. இது ஸ்தூலமான உடலையோ, பொருள்களையோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/130&oldid=1122352" இருந்து மீள்விக்கப்பட்டது