பக்கம்:வாழ்க்கை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

129


கிறான். குழந்தைப் பருவம் மாறி, வயது முதிரும் போது உடலில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது. மனிதன் வளர்ச்சி யடையாமல், சிறு வயதில் அவனுக்கிருந்த வளைந்து கொடுக்கும் தன்மையும் ஜீவசக்தியும் குறைந்து கொண்டே வருகின்றன. உடல் முதிர்ச்சிபெற்று, வயோதிகத்தால் தள்ளாட்டமும், முடிவில் மரணமும் ஏற்படாம லிருக்கவேண்டும் என்பதற்காக அவன் செய்யும் - முயற்சிகளே வாழ்க்கை முழுதும் நிறைந்திருக்கும். இவை யாவும் பயனற்றவை.

வாழ்க்கையை உணர்ந்தவன் நிலை இதுவன்று அவன் ஒன்றை விரும்பி மற்றொன்றை வெறுத்தல் என்ற நிலையை மாற்றி, விருப்பத்தை- அன்பை பெருக்கிக் கொண்டே யிருக்கிறான். அவன் வாழ்க்கை தேங்கிக் கிடக்காமல், இயங்கிவருகிறது. வாழ்க்கையின் இயக்கத்திலே - அன்பின் பெருக்கத்திலேதான் - வாழ்வு இருக்கிறது என்பதை அவன் காண்கிறான். அன்பின் பெருக்கால் அவனுக்கும் நன்மை பெருகுகிறது. தனக்குப் புலப்படாத பெருமையிலிருந்தே கிடைத்திருக்கும் வாழ்க்கை இடை விடாமல் வளர்ந்து வருவதை இவன் உணருகிறான். அமைதியோடும் ஆனந்தத்தோடும் அவன் அதைத் தனக்குப் புலப்படாத எதிர் காலத்திற்கும் கொண்டு செல்கிறான்.

பிணி, பசி, மூப்பு, துன்பம் ஆகியவை மனிதனின் உணர்ச்சியையும் வாழ்க்கையையும் அழித்து விடுவதாக ஜனங்கள் சொல்லுகிறார்கள். எந்த மனிதனின் வாழ்க்கையை அழிக்கின்றன? பரி. யோவான் முதுமைப் பருவமடைந்திருந்த நிலையை நான் கற்பனை

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/136&oldid=1122358" இலிருந்து மீள்விக்கப்பட்டது