பக்கம்:வாழ்க்கை.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
130
வாழ்க்கை
 

செய்து பார்ப்பதுண்டு. அவர் முடிவில் ‘சகோதரர்களே, ஒருவரை யொருவர் நேசியுங்கள்!’ என்ற சொற்களையே கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இருந்த இடத்திலிருந்து அசைய முடியாத நிலையில் கண்களில் நீர் மல்கி நிறைந்து, இந்த வயோதிகர் மூன்றே வார்த்தைகளை முணுமுணுத்துச் சொன்னார் ‘ஒருவரை யொருவர் நேசியுங்கள்!’ இத்தகைய மகான்களுடைய வாழ்க்கையில் உடலின் மிருக வாழ்வு. உலகத்தோடு கொண்ட புதுத் தொடர்புடன் ஐக்கியமாகி விடுகிறது. இத்தகையவர்களின் வாழ்க்கையை எது அழிக்க முடியும்?

உண்மையான வாழ்க்கையை உணர்ந்த மனிதன், தான் ஒளியை நெருங்கிச் செல்லும் போது, தன் நிழல் குறைந்து கொண்டே வருவதில் சந்தோஷமே அடைவான். பூரணமான வெளிச்சத்தில் நிற்கும் போது நிழலே இல்லாமற்போகும். ஆனால் உடலின் இயக்கமே வாழ்வென்று கழுதுவோன், ஒளியை நெருங்க நெருங்க நிழல் குறைவதையும், முடிவில் அது இல்லாமலே போவதையும் கண்டு துயரப்படுவான். இவனுக்கு நிழலே வாழ்க்கை, ஒளியன்று! மரணமும் இது போன்றதே. நிழலின் மறைவைக் கொண்டு, அதற்குக் காரணமான பொருளே அழிந்து விட்டதாக எண்ணுவது தவறு.

காலத்திலும் இடத்திலும் நிகழும் தன் உடல் வாழ்வையும், உலகத்தோடு அன்பின் மூலம் தன் தொடர்பு வளர்ந்து வருவதையும் கொண்டு தன்னை நன்கு அறிந்து கொண்டவனுக்கு நிழல் மறைவது அதிக ஒளி வருவதையே குறிக்கும். அவன் அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/137&oldid=1122359" இருந்து மீள்விக்கப்பட்டது