பக்கம்:வாழ்க்கை.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
131
 

அழிவு அல்லது மரணம் என்று கருத மாட்டான். வாழ்க்கை உலகத்தோடு தான் கொண்ட தனித் தொடர்பு என்பது அவனுக்குத் தெரியும். அது அவன் பிறக்கும்போது கூட வந்தது. வாழ்க்கையில் அன்பின் வளர்ச்சியால் அவன் அதை மேலும் வளர்த்து வந்திருக்கிறான். இத்தகைய மனிதன் தான் அழிந்து போகக் கூடியவன் என்பதை நம்பவே மாட்டான். ஸ்தூல உலகத்தின் விதிகளை யெல்லாம் தெரிந்த ஒருவன், தன்னைத் தாய் பெற்றெடுக்கவில்லை என்றும், திடீரென்று கீரைப் பாத்தியிலிருந்து கண்டெடுத்தாள் என்றும் நம்புவானா? தன் உடல் திடீரென்று எங்கோ தெரியாத இடத்திற்குப் பறந்து ஓடிவிடும் என்றால் நம்புவானா? இதைப் போலவே வாழ்க்கையின் விதிகளை அறிந்தவன், மரணத்தால் தான் அழிந்து விடுவதாகச் சொல்வதை நம்பவே மாட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/138&oldid=1122360" இருந்து மீள்விக்கப்பட்டது