பக்கம்:வாழ்க்கை.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9
இறந்த பின்னும் வாழ்க்கை உண்டு

வாழ்க்கையின் சாராம்சத்தை நாம் நன்றாகக் கவனித்தால், மரணம் ஒரு மூட நம்பிக்கை என்று தெரியும். என்னிடம் மிகுந்த அன்போடு பழகிய என் சகோதரன், என்னைப் போலவே வாழ்ந்து வந்தவன், இப்போது இந்த வாழ்க்கையில் இல்லை. அவனுடைய வாழ்க்கை அவனுடைய உணர்ச்சியில் இருந்தது; அந்த உணர்ச்சி உடலோடு மறைந்து விட்டது. காலத்திலும் இடத்திலும் அவ்வுணர்ச்சி மீண்டும் மலர்ச்சியடைய முடியாது. என் சகோதரன் உயிரோடிருந்தான்; அவனோடு நான் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தேன். இப்போது அவன் இல்லை, அவன் எங்கேயிருக்கிறான் என்பதும் எனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/139&oldid=1123852" இருந்து மீள்விக்கப்பட்டது