பக்கம்:வாழ்க்கை.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
7
 

லிருந்தே மனித சமூகமும் இதைத் தெரிந்து வந்திருக்கிறது.

‘ஒவ்வொருவரும் தத்தம் நன்மைக்காக ஒருவரையொருவர் அழித்துத் தாமும் அழிந்து போகும் மனிதர் மத்தியிலே ஒரு மனிதன் தன் தனி இன்பத்தையே நாட்டமாய், கொள்ளும் வாழ்க்கை தீயது; உண்மைக்கு முரண்பட்டது’-ஆதிகாலம் முதலே மனிதன் இப்படி கூறிவந்திருக்கிறான். இந்தியா, சீனா, எகிப்து, கிரீஸ் முதலிய தேசங்களிலே தோன்றிய தத்துவ ஞானிகளும், யூத ஞானிகளும் வாழ்க்கையில் அமைந்துள்ள இந்த முரண்பாட்டைப் பற்றித் தெளிவாகவும், மிகவும் அழுத்தமாகவும் விளக்கி யிருக்கிறார்கள். மானிட உள்ளம் அழியாத அமர இன்பத்தைக் கண்டுபிடிப்பதற்காக மிகப் புராதன காலத்திலிருந்தே முயன்று வந்திருக்கிறது; சண்டைகள், பூசல்கள், துன்பங்கள், மரணம் எதுவும் அழிக்க முடியாத நித்தியமான இன்பத்தை நாடி வந்திருக்கிறது. நிலையான இந்த இன்பத்தைத் தெளிவாக அறிந்து கொண்டு வாழ முற்பட்ட காலங்களிலேதான் மனித சமூகம் முற்போக்கடைந்திக்கின்றது.

சரித்திர ஆராய்ச்சிக்கு எட்டாத பண்டைக் காலத்திலிருந்தே பல நாடுகளில், பல்வேறு மக்களிடையே தோன்றிய ஞானிகள் வாழ்க்கையைப் பற்றி தெள்ளத் தெளிவா விளக்கியிருக்கிறார்கள்; வாழ்க்கையின் முக்கியமான முரண்பாட்டைத் தெளிவுபடுத்தி யிருக்கிறார்கள். மனிதனுக்கு உண்மையான இன்பமும், உண்மையான வாழ்க்கையும் எவை என்பதையும் அவர்கள் எடுத்துக் காட்டி யிருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/14&oldid=1121574" இருந்து மீள்விக்கப்பட்டது