பக்கம்:வாழ்க்கை.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
133
 

குத் தெரியவில்லை: ‘இதுதானே மரணம்!’ என்று ஜனங்கள் சொல்வார்கள்.

வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாதவர்களே இப்படிச் சொல்லக் கூடும். வெளியுலகில் ஒருவனின் தொடர்பு இல்லாமற் போவதை வைத்துக் கொண்டு அதுவே மரணத்திற்கு மறுக்க முடியாத சான்று என்பார்கள்.

என் சகோதரன் இறந்து போய்விட்டான். அவன் உலகத்தோடு பெற்றிருந்த தொடர்பின் வெளித் தோற்றம் என் கண்ணுக்குப் புலனாகாமல் மறைந்துவிட்டது. காலத்திலும் இடத்திலும் அதை நான் இதுவரை கண்டு வந்தேன். இப்போது காண முடியவில்லை. என் சகோதரனுடைய உடல் மறைந்ததால், அவனைப்பற்றிய எல்லாமே அழிந்து போய் விட்டனவா?

வண்ணாத்திப்பூச்சி முதலில் சிறுபுழுக்குரம்பையா[1]யிருந்து பின்னால் தான் அதிலிருந்து வெளி வருகிறது. பூச்சி வெளியேறுமுன், ஒரு குரம்பை, பக்கத்திலே காலியாய்க் கிடக்கும் மற்றொரு குரம்பையைப் பார்த்து, ‘ஐயோ! ஒன்றுமே யில்லையே! எல்லாம் காலியாகிவிட்டது!’ என்று சொல்லக்கூடும். இது பொருத்தமானது தான்; ஏனெனில், அது தன் கூட்டாளியோடு இனிமேல் தொடர்பு கொள்ள முடியாது. மனிதரைப்போல அதற்கு அறிவில்லை. வேறுவகையில் சம்பந்தம் வைத்துக்கொள்ள அதற்கு ஆற்றலில்லை.

ஆனால் மனிதனுடைய நிலை இப்படியில்லை. என் சகோதரன் இறந்து போய்விட்டான்; அவனுடைய


  1. குரம்பை - கூடு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/140&oldid=1122363" இருந்து மீள்விக்கப்பட்டது