பக்கம்:வாழ்க்கை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

135


பட்டிருக்கின்றன.. அவை என்னை ஊடுருவி நிற்கின்றன. அவன் உலகத்தோடு பெற்றிருந்த தனித் தொடர்போடு என் தொடர்பும் ஒன்றாகவே தோன்றுகிறது. என் கண்ணுக்கு அவன் புலனாகா விட்டாலும், என்னை அவன் கவர்ச்சி செய்து இழுத்துக் கொள்கிறான். அவன் வாழ்க்கை முடிவடைந்து விடவில்லை. இதே போல, உலகத்தோடு அவன் கொண்டிருந்த சம்பந்தமும் அற்று ஒழியவில்லை. அது மனிதர்களின் செயலைப் பாதித்துக் கொண்டே தான் இருக்கிறது.

கிருஸ்துநாதர் இறந்து வெகுகாலமாகிவிட்டது; அவர் பூத உடலோடு வாழ்ந்தது சொற்ப காலமே; ஆனால், அறிவின் நியதிப்படியும் அன்பு நெறியிலும் நிகழ்ந்த அவருடைய வாழ்க்கை இன்று உலகில் கோடிக்கணக்கான மக்களின் மீது , ஆதிக்கியம் கொண்டிருக்கிறது. இவர்கள் அவர் உலகத்தோடு கொண்டிருந்த தொடர்பை ஏற்றுக் கொண்டு, அதைப் போலவே தங்கள் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்கிறார்கள். கிறிஸ்துநாதருடைய வாழ்கையின் பயன் இது என்று சொல்வது பொருந்தாது. பூமிக்குள் மறைந்த வித்து, செடியாகி, மரமாகிறது என்று சொல்லாமல், வித்து அழிந்துவிட்டது, வித்து இருந்ததன் விளைவு அல்லது பயன் தான் மரம் என்று சொல்வது போல்தான் இப்படிக் காரணம் கூறுவதும். கிறிஸ்து பெருமானின் வாழ்க்கையே அவர் உலகத்தோடு வைத்துக்கொண் டிருந்த தொடர்பே-மக்களின் வாழ்க்கையை ஊடுருவி நிற்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/142&oldid=1122365" இலிருந்து மீள்விக்கப்பட்டது