பக்கம்:வாழ்க்கை.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
136
வாழ்க்கை
 

காய்ந்த சருகுகளில் நெருப்பு எரிகிறது. நெருப்பின் ஒளிக்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. சருகுகள் தீர்ந்து போய்விட்டன. உடனே நெருப்பு அழிந்துவிட்டது என்று நான் சொல்ல முடியுமா? இப்போதும் அது ஒரு காட்டிலோ, அல்லது எனக்குத் தெரியாத வேறு இடத்திலோ, எரிந்து கொண்டுதான் இருக்கிறது. நெருப்பே அழிந்து விட்டது என்று முடிவு செய்ய இடமில்லை.

எனக்கு முன்னால் இருந்த சகல மனிதர்கரின் வாழ்க்கையையும் வைத்தே என் வாழ்க்கை அமைந்திருக்கிறது. மிருக இயல்பைப் பகுத்தறிவு உணர்ச்சிக்கு அடங்கிக் கிடக்கும்படி செய்து அன்பு காட்டி வாழ்ந்தவர்கள் அனைவரும் இப்போதும் மற்ற மக்களிலே-அவர்கள் வாழ்க்கையில் - தாங்களும் வாழ்கிறார்கள். இது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால் போதும் -மரணத்தைப் பற்றிய மூட பயம் என்னை விட்டு அகன்று விடும்.

கிறிஸ்து, தமது உயிரின் பொய்த் தோற்றம் மறைந்த பின்னும், தாம் தாழ்வதாகச் சொன்னார். ஏனெனில், உடலோடு இருக்கும்போதே அவர் உண்மையான நித்திய வாழ்க்கையுள் நுழைந்து விட்டார். அவர் பெற்றிருந்த ஒளி சுற்றியிருந்த மக்களின் மனங்களையும் ஒளி செய்தது. தனிப் பண்பைத் துறந்து, அறிவுக்குப் பொருத்தமான அன்பு வாழ்க்கை வாழும் ஒவ்வொரு மனிதனும் இத்தகைய ஒளியைக் காண்கிறான்.

ஒருவருடைய வாழ்க்கையில் சிலருடன் தொடர்பு கொண்டோ, அல்லது பல்லாயிரம் மக்களுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/143&oldid=1122367" இருந்து மீள்விக்கப்பட்டது