பக்கம்:வாழ்க்கை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

139


தோன்றிப் பின் மடிவதானால், விசேஷமாகத் தான் கருதும் ‘நான்’ என்ற அகம் நிலைத்திருக்காது என்பதை அறிகிறான். அவன் தான் ஒரு போதும் பிறக்கவில்லை என்றும், தான் எப்போதும் இருந்தவன் என்றும், இருப்பவன் என்றும், இருக்கப் போகிறவன் என்றும் உணரும்போது, தான் நித்தியமானவன் என்பது புலப்படும். அவனுடைய வாழ்க்கை தனித்த ஓர் அலையன்று என்றும், இந்த வாழ்வில் ஓர் இயக்கம் என்றும் தெரிந்து கொள்ளும்வரை மனிதன் தன் நித்தியத்துவத்தை நம்ப மாட்டான்.

உடலின் அழிவுக்கு மனிதன் பயப்பட முடியாது ஏனெனில் சடப்பொருள் சடத்தோடு சேர்ந்து விடுகிறது. அதன் உருவம் மாறுவதைத் தவிர சேதம் ஒன்றும் இல்லை. தன் உணர்ச்சி - தான் என்ற ‘அகம்’ மடிகிறது என்று கருதினால், இந்த உணர்ச்சி வாழ்வில் எத்தனையோ முறை மாறியதுதானே! சிறு வயதிலிருந்த உணர்ச்சி பின் வாழ்வில் இல்லை. இந்த மாற்றத்திற்கெல்லாம் வருந்தாமல், மரணத்தினால் மாறுவதற்கு மட்டும் வருந்துவானேன்? உண்பது, உடுப்பது, பருகுவது, மக்களைப் பெறுவது, வீடுகள் அமைப்பது போன்ற செயல்களும், மற்ற மனிதர்கள் விலங்குகளுடன் சில முறைகளில் தொடர்புகள் கொண்டதும் போய்விடுமே என்று அவன் கருதவும் இடமில்லை. ஏனெனில் அவன் போகும் போது மானிட இனமும் போய்விடாது. கோடிக் கணக்கான மனிதர் அவனைப் போலவே உலகத்தோடு தொடர்புகள் கொண்டிருப்பர். தன் பகுத்தறிவு உணர்ச்சி உலகத்தோடு கொண்டிருந்த சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/146&oldid=1123859" இலிருந்து மீள்விக்கப்பட்டது