பக்கம்:வாழ்க்கை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

வாழ்க்கை


பந்தம் அழிந்துவிடுமே என்றும் மனிதன் கவலைப்பட இடமில்லை. அவ்வுணர்ச்சி அவனுடைய பிறப்புக்கு முன்னாலேயே ஏற்பட்டது. அவன் பிறப்புக்குப் புறம் பான ஒன்று. அவன் மரணத்தோடு அது அழியவும் முடியாது.

உயிரின் இயக்கத்தில் இந்த வாழ்க்கை ஒரு பகுதி

நானும், மற்ற எல்லா மனிதர்களும் உலகத்துடன் குறிப்பிட்ட ஒரு தொடர்பு கொண்டு இங்கே இருக்கிறோம்; ஒவ்வொருவரும் ஓரளவு அன்பு கொண்டிருக்கிறோம். இந்த அன்பு நாம் பிறக்கு முன்பே உள்ளது; பிறக்கும்போது நாம் அதைக் கொண்டு வருகிறோம். பிறப்பதற்கு முன்னாலுள்ள நிலையை நாம் அறிய முடியாதது போலவே, மரணத்திற்குப் பின்பு ஏற்படும் நிலையும் நமக்குப் புலனாவதில்லை ; ஆனால் இடையில் நம் வாழ்க்கை முழுதும் இந்த அன்பு வளர்ந்து முதிர்ந்து வருவதைப் பார்க்கிறோம்.

உலகில் சிலர் நீண்ட காலம் வாழ்கின்றனர்; சிலர் குறுகிய காலத்திலேயே மரணமடைகின்றனர். ஏன்? வாழ்க்கை பிறப்பில் ஆரம்பமாகவுமில்லை; மரணத்தோடு தீர்ந்து போவதுமில்லை. பிறப்புக்கு முன்னாலும், மரணத்திற்குப் பின்னாலும் எட்டிப் பார்க்கக் கூடிய ஆற்றல் நமக்கு இப்போது (இந்த உடலோடு விளங்குகையில்) இல்லை. என் வீட்டுச் சாளரத்தின் வழியாக வெளியே நடந்து செல்பவர்களை நான் பார்க்கிறேன். சாளரத்தின் அருகில் வந்து காட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/147&oldid=1122371" இலிருந்து மீள்விக்கப்பட்டது