பக்கம்:வாழ்க்கை.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
141
 

தரும் மனிதர் அதுவரை இல்லாதிருந்தனர் என்று சொல்ல முடியுமா? அவர்கள் இருந்தனர்; சாளரத்தின் பக்கம் வரும்வரை நான் அவர்களைப் பார்க்க முடியவில்லை. அதுபோலவே, சாளரத்தைத் தாண்டி அப்பாலே சென்று விட்டவர்களும் இல்லாமற் போகின்றனர் என்று சொல்ல முடியுமா? சாளரத்திற்கு அப்பால் பார்க்கிற ஆற்றல் எனக்கு இல்லாததால், அந்த மனிதர்களே இல்லாமற் போனார்கள் என்று சொல்லுதல் தவறு.

மற்றவர்கள் பிறக்கும்போது வாழ்க்கையில் என்ன தத்துவங்களைக் கொண்டு வந்தார்கள் என்பது நமக்குத் தெரியாது; உயிரின் இயக்கம் அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன சாதிக்கவேண்டுமென்று இருந்தது என்பதும் நமக்குத் தெரியாது. காரணங்களால் வாழ்க்கையிலுள்ளவர்கள் அடுத்த, வாழ்வுக்குத் தயாராகி விட்டார்கள் என்று தோன்றுகிறது என்பதும் நமக்கு விளங்குவதில்லை. நம் கண்களின் பார்வையால் இந்த உலக வாழ்க்கையிலுள்ளவைகளையே காண முடிகிறது. இவற்றிற்கு அப்பாலும் இப்பாலும் பார்க்க ஆற்றலில்லாததால், மரணத்திற்கு அப்பாலுள்ள வாழ்க்கையையோ, பிறப்புக்கு முன்னாலுள்ளதையோ நாம் அறிய முடிவதில்லை. நம் ஆராய்ச்சி அறிவினால் இவ்வளவு தான் தெரிந்து கொள்ள முடியும். எனக்குக் கண்ணுக்கு முன்னால் சமீபத்திலுள்ள பொருள்களே தென்படுகின்றன; தொலைவிலுள்ளவை தென்படுவதில்லை. எந்த ஆற்றல் அவசியம் தேவையோ, அது மட்டுமே கண்ணுக்கு இருக்கிறது. தூரத்தைப் பார்க்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/148&oldid=1122372" இருந்து மீள்விக்கப்பட்டது