பக்கம்:வாழ்க்கை.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


10
வாழ்வின் துயரங்கள்

னிதன் மரண பயத்தை உதறிவிட்டு, மரணத்தைப்பற்றிய நினைவில்லாமல் இருப்பதாக வைத்துக் கொள்வோம். பின்னும் அவன் அநுபவிக்கும் கொடுந் துன்பங்களைப் பார்த்தால், அவைகளுக்கு நியாயமான காரணமும் இல்லை; அவைகளைத் தவிர்க்கவும் முடியாது. அவன் வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தமிருக்கிறது என்று கருதுவதைக்கூட இத் துன்பங்களே ஒழித்துவிடக் கூடும்.

நான் பிறருக்குப் பயனுள்ள ஒரு நல்ல காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறேன். திடீரென்று ஒரு நோய் ஏற்பட்டு, என் வேலையைத் தடைசெய்து, என்னைப் பலவீனப் படுத்தித் துயரத்தில் ஆழ்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/151&oldid=1123861" இருந்து மீள்விக்கப்பட்டது