பக்கம்:வாழ்க்கை.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
146
வாழ்க்கை
 

தங்கள் தனித்தன்மையையே வாழ்க்கையாகக் கருதுபவர்கள், இத்தகைய துயரங்களைக் கண்டும். அநுபவித்தும், ஒரு நிமிஷங்கூட வாழ விரும்ப மாட்டார்கள். கொடுமையான வேதனைகள் ஏற்படுவதை விளக்கவும் முடியவில்லை. இவைகளைக் கண்டு பயந்து நடுங்கி எந்த மனிதனுமே உயிர் வாழ முடியாத அளவுக்கு இவைகள் பெருகியிருக்கின்றன.

இருந்தபோதிலும், மக்கள் வாழத்தான் செய்கின்றனர். உயிரை மாய்த்துக் கொள்ள எத்தனையோ வழிகள் தெரிந்திருந்தும், இன்னலும் இடுக்கணும் நிறைந்த வாழ்க்கையை அவர்கள் துறப்பதில்லை. தங்களாகக் குறை சொல்லிக் கொள்கிறார்கள்; துயரங்களுக்காக வருந்துகிறார்கள் - ஆயினும் தொடர்ந்து வாழ்கிறார்கள்!

வாழ்வில் துன்பங்களைவிட இன்பங்கள் அதிகமாயிருப்பதால், மக்கள் வாழ விரும்புவதாகச் சொல்வது தவறு. ஏனென்றால், வாழ்க்கையைப் பற்றிய சாதாரண ஆராய்ச்சியிலும், தத்துவ ஆராய்ச்சியிலும், மண்ணுலக வாழ்க்கை ஒரே துக்க பரம்பரை என்று தெளிவாகத் தெரிகின்றது. துன்பங்களின் அளவுக்கு இங்கே இன்பங்கள் இல்லை.

இந்த விசித்திர முரண்பாட்டிற்கு ஒரே விடை தான் உண்டு. எல்லாத் துன்பங்களும் எப்போதும் அவசியமானவை. தங்கள் வாழ்வின் நன்மைக்கு இன்றியமையாதவை என்று மக்கள் தங்கள் அந்த-ராத்மாவில் உணர்வதாலேயே மீண்டும் வாழ விரும்புகின்றனர். பல சமயங்களில் இந்தத் துயரங்களைக் கண்டு ஆற்றாமல் அவர்கள் எதிர்த்து நிற்கிறார்கள் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/153&oldid=1123863" இருந்து மீள்விக்கப்பட்டது