பக்கம்:வாழ்க்கை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

149


கிறான். ஆனால், தன்னைக் கொல்ல வரும் ஓநாய்களை எதிர்த்து விரட்டித் தான் தப்பித்துக்கொள்ளவே விரும்புகிறான். இத்தகைய மனிதன் தனக்கு நேரும் சகல விஷயங்களும் ஏற்பட்டுத் தீரவேண்டியவை என்று கருதுவது கஷ்டம். அவன் இதை ஒப்புக் கொள்ள முடியாது. நேர்ந்தவை நேர்ந்திருக்கக் கூடாதென்றே அவன் கருதுகிறான். அவன் வேறு என்ன தான் செய்யவேண்டும்? பகுத்தறிவுள்ள அவன் தன் இயற்கைக்கு ஏற்ற முறையில் தன்னைக் காத்துக்கொள்ள என்ன தான் செய்யவேண்டும்? துன்பத்திற்குக் காரணமான தன் பாவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அதற்கு வருந்திக் கழுவாய் தேடவேண்டும்; உண்மையை உணர வேண்டும்.

மிருகம் நிகழ்காலத்தில் மட்டும் துன்பப்படுகிறது; அதற்காக அது இப்போது உடனடியாகச் செய்யும் வேலையே அதற்குத் திருப்தியளிக்கும். ஆனால் மனிதன் முந்திய காலத்திலும், நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் துயரப்படுகிறான்; எனவே, நிகழ்காலத்திற்குத் தேவையான செயல் மட்டும் அவனுக்குத் திருப்தி யளிக்காது. இப்போது ஏற்படும் துயரத்திற்குரிய முந்திய காலத்துள்ள காரணத்தையும் துயரத்தின் எதிர்கால விளைவையும் எண்ணியே அவன் செயல் புரிய வேண்டும். அதுவே அவனுக்குத் திருப்தி யளிக்கும்.

நான் காயப்படுகிறேன், சிறைப்படுகிறேன், அல்லது விலங்குகளால் தாக்கப்படுகிறேன் என்றால், இவற்றால் ஏற்படும் துயரம் நான் அநுபவிக்கும் துயரத்தின் ஒரு சிறு பகுதிதான். இப்போதைய துயரத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/156&oldid=1123871" இலிருந்து மீள்விக்கப்பட்டது