பக்கம்:வாழ்க்கை.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
151
 

நீங்குவதையும் புரிந்து கொள்ளாததால் தான் துன்பம் ஏன் வருகிறதென்று அவன் மனம் கேட்கிறது.

மிருக இயல்பே வாழ்க்கை யென்று கருதுவோருக்குத் துன்பங்கள் அர்த்தமற்றவை, காரணமில்லாமல் ஏற்படுபவை என்று தோன்றும். பகுத்தறிவு உணர்ச்சியின் விதிப்படி மிருக இயல்பை அடக்கி வாழ்பவர்களுக்குத் துன்பமும், அவர்கள் முன் செய்த தவறும் தொடர்புடையவை என்பது விளங்கும். அதனால் தவறு அல்லது பாவத்தை ஒப்புக் கொண்டு, அதிலிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்வார்கள். மிருகம் தன் துன்பத்தையும் அதற்குரிய தவறுதலையும் இடத்திலும் காலத்திலும் நிகழ்ந்ததைக் கொண்டு உணரும்; ஆனால், மனிதர்கள் துன்பத்தையும் அத்துன்பத்தின் காரணத்தையும் உள்ளுணர்ச்சியிலேயே தேடிக் காண்பார்கள். பாவத்தினால் துன்பம் ஏற்படுகிறது. பாவத்திற்காகக் கழிவிரக்கம் கொள்வதே துன்பத்திலிருந்து விடுவித்து நன்மையளிக்கும் என்று நம்புவார்கள்.

உலக வாழ்க்கையோடு தொடர்பு கொள்ளாமல், தான் செய்த பாவங்களால் உலகில் துன்பங்களைக் கொண்டு வந்ததை அறியாமல், தான் நிரபராதியென்று கருதிக் கொண்டு துன்பங்களை எதிர்த்து நிற்கும் மனிதன் துன்பங்களின் வேதனைகளை முழுதும் அநுபவிக்கிறான்.

துன்பத்தின் காரணம் பாவம் என்று பகுத்தறிவு எடுத்துக் காட்டுகிறது. வாழ்க்கையின் ஒரே கடமையாக விளங்கும் அன்பு இதை உறுதிப்படுத்துகிறது. மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/158&oldid=1122382" இருந்து மீள்விக்கப்பட்டது