பக்கம்:வாழ்க்கை.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
155
 

இந்தக் கதையை நாம் சிறிது மாற்றிக்கொண்டு பார்ப்போம். ஆதியில் மனிதர்கள் வேதனையான உணர்ச்சிகளை அறிய முடியாத நிலையிலிருந்தார்கள். ஆகையால், துன்பமே தோன்றாம லிருந்தது. ஆனால், நாளுக்கு நாள் அவர்கள் நிலைமை மோசமாகி விட்டதும், அவர்களுடைய நன்மைக்காக வேதனை உணர்ச்சிகளை அறியும் உணர்வு அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. இக்கதை வாழ்வுக்கு வேதனை அவசியமென்பதைத் தெளிவாக்கும்.

வேதனை உணர்ச்சி யில்லாமலே மனிதர்கள் படைக்கப்பட்டிருந்தால், அவர்களாகவே சீக்கிரத்தில் அது வேண்டுமென்று பிரார்த்தித்திருப்பார்கள். பிரசவவேதனை யில்லாவிட்டால், ஸ்திரீகள் உயிர் வாழவே தகுதியில்லாத பல குழந்தைகளையே பெறுவர். குழந்தை நெருப்பைத் தீண்டினால் கையைச் சுட்டு விடுகிறது; இந்த வேதனையால் அது மறுபடி நெருப்பைத் தீண்டாமல் தப்பித்துக் கொள்கிறது. எனவே, வேதனை யில்லாவிட்டால், குழந்தைகளும் இளைஞர்களும் தங்கள் உடல்களை அழித்துக்கொண்டு விடுவார்கள். வேதனை யில்லாவிட்டால், மனிதர்கள் தங்கள் தவறுகளையோ மற்றவர் தவறுகளையோ அறியவே முடியாது- அவர்கள் இந்த வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய முடியாமற் போகும். அவர்களுடைய செயலுக்கு அறிவுக்குப் பொருத்தமான இலட்சியம் இராது. உடல் அழிவதையே தங்கள் மரணமென்று பயந்து நடுங்குவதை மாற்ற முடியாது: அவர்கள் அன்பு பெறவும் முடியாமற் போகும். வேதனை யில்லாவிட்டால், மனிதனின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/162&oldid=1122390" இருந்து மீள்விக்கப்பட்டது