பக்கம்:வாழ்க்கை.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
157
 

துன்பத்தை நானே அதிகப்படுத்திக் கொள்கிறேன். என் வாழ்க்கையிலும் உலகின் வாழ்க்கையிலுமுள்ள உண்மையை உணராம லிருப்பதால், வாழ்வதற்கு வேண்டிய வல்லமையை நான் இழக்கிறேன்.

உண்மையான வாழ்க்கையைப் பற்றிய உணர்வும் அவ் வாழ்க்கையின் செயல் முறையுமே துன்பத்தைக் குறைக்கின்றன. தனி மனிதனின் வாழ்வுக்கும் அவனது இலட்சியத்திற்கும் இடையேயுள்ள அளவு கடந்த வேற்றுமையை அவை குறைத்து இரண்டையும் சமரசப்படுத்த உதவுகின்றன. மனிதன் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், ஜனனத்திலிருந்து மரணம் வரையே நிலைத்திருக்கும் அவனது தனித் தன்மையில் வாழ்க்கை அடங்கவிடவில்லை என்பதை உணரவேண்டும். அவனது இலட்சியத்தைப் பற்றி அவனுக்கு ஓரளவு தெரிந்ததைக் கொண்டு, அதை அடைய முடியுமென்று நம்ப வேண்டும். அவன் வாழ்க்கையின் செயல் முறையும், உலக வாழ்க்கையின் செயல் முறையும், பிரிக்க முடியாமல் ஒன்றாகவே யுள்ளவை- இலட்சியத்தை நோக்கியே சென்று கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் அந்தச் செயல் முறை.

மனிதன் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், அவன் வாழ்க்கையின் ஒரே உண்மையான பாதையில் செல்லும்படி உந்தப்படுகிறான். பகுத்தறிவு உணர்ச்சி அவனைத் தூண்டுகிறது; இல்லாவிட்டால், அவனுடைய தவறுகளால் ஏற்படும் துயரம் தூண்டுகிறது. அந்த உண்மைப் பாதையில் மேன்மேலும் பெருகிக் கொண்டிருக்கும் நன்மையே நிறைந்திருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/164&oldid=1123881" இருந்து மீள்விக்கப்பட்டது