பக்கம்:வாழ்க்கை.pdf/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
158
வாழ்க்கை
 

கிறது. அந்த நன்மையை எதுவும் அசைக்க முடியாது; அதற்கு ஆதியுமில்லை, அந்தமுமில்லை.

முடிவுரை

நன்மையை நாடிச் செல்வதே மனிதனின் வாழ்க்கை; அவன் நாடுவதே அவனுக்குக் கிடைக்கிறது.

உடல் சம்பந்தமான மிருக வாழ்வையே தன் வாழ்க்கையாகக் கொள்ளும்போது மனிதன் மரணத்தையும் துன்பங்களையும் தீமையாகக் காண்கிறான். அவன் விலங்குப் பான்மையில் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும்போதுதான் மரணமும் துன்பங்களும் அவனுக்குப் பிரமாதமாகத் தோன்றுகின்றன. கத்தரித் தோட்டத்துப் பொம்மைகளைக் கண்டு பறவைகள் பயப்படுவதுபோல், அவன் இவைகளைக் கண்டு அஞ்சுகிறான். அஞ்சி, உண்மை வாழ்க்கைக்கு ஓடி வருகிறான். உண்மையான வாழ்க்கை பகுத்தறிவின் சட்டத்திற்கு அடங்கி, அன்பின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. மனிதன் தன் வாழ்க்கையின் சட்டத்தை மீறுவதே மரணமும் துன்பமும். இந்தச் சட்டப்படி வாழ்பவனுக்கு மரணமுமில்லை, துன்பமுமில்லை.

உழைத்துக் களைத்தவர்களும் பாரத்தைச் சுமப்பவர்களும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு ஓய்வளிக்கிறேன். எனது பாரத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டு என்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்; ஏனெனில், நான் அடக்கமும் தாழ்மையுங் கொண்ட இதயமுடையவன். நீங்கள் உங்கள் ஆன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/165&oldid=1123885" இருந்து மீள்விக்கப்பட்டது