பக்கம்:வாழ்க்கை.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10
வாழ்க்கை
 

தோன்றும் வாழ்வுக்கும் ஒரு பொருளுண்டு என்று தெளிவுபடுத்துவதையோ யாரும் மறுக்க முடியாது. தனிப்பட்டவரின் சுயநல ஆசை வெறும் ஏமாற்றத்தில் முடிவதை மாற்றி, துன்பங்களும் மரணமும் தொடர முடியாத ஒரு நன்மையை அடைய முடியும் என்பதை முற்காலத்து அறிஞர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

மதிநலம் வாய்ந்த ஞானிகள் வாழ்க்கையைப் பற்றி மானிட சமூகத்திற்கு அறிவுறுத்திய விளக்கங்களை உணர்ந்து அவற்றின்படி அநேகர் நடந்து வந்திருக்கின்றனர். ஆனால் அவைகளை அறியாதவர்களே பெரும்பாலோர், மனித வாழ்வில் முரண்பாடு இருப்பதையே பலர் பார்ப்பதிலை. வாழ்க்கை முழுதிலுமோ, அது ஒரு பகுதியிலோ, மிருகவாழ்க்கையே வாழ்ந்தவர்களும், வாழ்பவர்களும் கோடி கணக்கான மக்கள். இவர்களிலே சிலர், உலகிலே தாங்கள் பெற்ற உயர்ந்த பதவிகளை பயன்படுத்திக் கொண்டு தங்கள் அறியாமையைத் தங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், மக்கட் சமுதாயத்திற்கு வழிகாட்டவும் முன்வந்து விட்டனர். வழி காட்டுவோருக்கே வாழ்வின் பொருள் தெரியாத நிலையில், மனிதனின் தனி வாழ்வே வாழ்க்கை என்று அவர் போதித்து வந்தனர் ; இன்றும் அப்படியே கூறி வருகின்றனர்.

இத்தகைய போலிப் போதகர்கள் எப்போதும் இருந்து வந்ததுபோல், இக்காலத்திலும் இருக்கிறனர். இவர்கள் இரு பிரிவினராக உள்ளனர். ஒரு கூட்டத்தார், மனித சமூகத்திற்கு வழிகாட்டிய மேதைகளின் போதனையைப் பெயரளவில் ஒப்புக் கொண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/17&oldid=1121577" இருந்து மீள்விக்கப்பட்டது