பக்கம்:வாழ்க்கை.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
11
 

அதன் கருத்தைக் கைவிட்டு விட்டனர். ஆன்றோருடைய போதனை நேரடியாகத் தெய்வத்திடமிருந்து வந்ததென்றும், மரணத்தின் பின்னால் ஏற்படக்கூடிய எதிர்கால வாழ்வைப் பற்றியே அது விளக்குவதென்றும் இவர்கள் மக்களுக்கு உபதேசித்து வரலாயினர். நாளடைவில் மத சம்பந்தமான சடங்குகளையும், வெளி ஆசாரங்களையுமே மக்கள் நிறைவேற்றி வரும்படி இவர்கள் கட்டாயப்படுத்தி வந்தனர். வாழ்க்கை ஆராய்ச்சி அறிவுக்குப் பொருத்தமில்லாதது என்பது இவர்கள் கொள்கை. மறு உலகில் கிடைக்கப் போகும் மகா உன்னதமான வாழ்க்கையை நம்புவதாலேயே இகவாழ்வு திருந்திவிடும் என்று இவர்கள் போதிக்கின்றனர்.

இரண்டாவது பிரிவினர் இயற்கைக்கு அப்பாற்பட்ட இறைவன், எதிர்கால வாழ்வு, எதையும் நம்புவதில்லை, காட்சிப் பிரமாணமே இவர்களுடைய முக்கியமான அளவுகோல். கண் முன்பு காணும் வாழ்க்கையைத் தவிர, வேறு வாழ்வில் இவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. மனிதன் பிறப்பதிலிருந்து இறப்புவரை உன்ன மிருக வாழ்வே வாழ்க என்று இவர்கள் வீர முழக்கம் செய்கின்றனர், மனிதனை விலங்காகக் கருதி, அவன் வாழ்வில் ஆராய்ச்சிக்குப் பொருந்தாத விஷயம் எதுவுமில்லை என்பது இவர்கள் துணிபு.

மேலே கூறிய ஒரு பிரிவினரும் போலிப் போதகர்கள், இவர்களுடைய போதனைகளுக்கு ஒரே அடிப்படையாக விளங்குவது வாழ்வின் மூலாதாரமான முரணை அறியாமை தான். இரு கூட்டத்தாருக்கும் எப்போதும் பகைமைதான். உலகம் முழுவதையுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/18&oldid=1121578" இருந்து மீள்விக்கப்பட்டது