பக்கம்:வாழ்க்கை.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12
வாழ்க்கை
 

இவர்கள் தங்கள் பூசல்களால் நிரப்பிவிட்டனர். இவர்களுடைய சண்டைகளின் நடுவில், ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசிகள் அருள் சுரந்து அறிவுறுத்திய வாழ்க்கை விளக்கங்கள் மறைந்து ஒதுங்கிவிட்டன. இதனால் உண்மையான நன்மைக்குரிய பாதை புலனாகவில்லை.

முதலாவது கூட்டத்தார், செத்த பிறகு ஏற்படும் எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டி, மெய்யறிவுக்குரிய போதனைகளை ஒழித்துக் கட்டுகின்றனர். இரண்டாவது கூட்டத்தார், இந்தப் போதனைகள் எல்லாம் பழங்கால அறியாமையால் விளைந்த பழக்கங்களின் சின்னங்கள் என்றும், மனிதனின் உடல் வாழ்வு தவிர வாழ்க்கையைப் பற்றி வேறு கேள்விகளை எழுப்பாமலிருப்பதே சமூக முன்னேற்றப் பாதை என்றும் அறுதியிட்டு உறுதி கூறுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/19&oldid=1121579" இருந்து மீள்விக்கப்பட்டது