பக்கம்:வாழ்க்கை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

வாழ்க்கை


மானவை அல்ல. அவை சிலருடைய ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுவதைத் தவிர மக்களிடையே பரவ முடியவில்லை. அவை தவறானவை; மக்கள் மனங்களைக் கவர முடியாதவை. மக்கள் அவைகளை ஏற்றுக்கொண்டிருந்தால், அவைகளைச் சுற்றித் தெய்வீகமான கதைகளைக் கட்டிப் போற்றி வந்திருப்பார்கள். ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை. மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள அந்தக் கொள்கைகளிலேயே உண்மை பொதிந்திருப்பதாக இக்காலத்தில் சிலர் சாதனை செய்கின்றனர்.

வேத ரிஷிகள், புத்தர், ஜாரதுஷ்டிரர்,[1] லாவோத்ஸே, கன்பூஷியஸ், இஸையா, கிறிஸ்து ஆகியோருடைய கொள்கைகள் மூட நம்பிக்கையைச் சேர்ந்தவை என்றும், தவறானவை என்றும் கருதப்படுகின்றன. ஏனெனில், அவை கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கையை அடிமுதல் நுனிவரை மாற்றி அமைத்திருக்கின்றன அல்லவா!

‘மூட நம்பிக்கைகள்’ என்று கருதப்படும். அந்தக் கொள்கைகளைப் பின்பற்றிக், கோடானு கோடி மக்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர்; இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அக் கொள்கைகள் காலக் கிரமத்தில் மாறுதலடைந்து சில புதுச் சேர்க்கைகளோடு இருப்பினும், உண்மையான நலன் எது என்பது பற்றி மனிதர் கேட்கும் கேள்விகளுக்கு அவை இப்போதும் விடையளித்து வருகின்றன.


  1. Zoroaster
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/21&oldid=1121985" இலிருந்து மீள்விக்கப்பட்டது