பக்கம்:வாழ்க்கை.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
15
 

பற்பல நூற்றாண்டுகளில் தோன்றும் பேரறிஞர்களின் சிந்தனை ஊற்றை அவைகளே திறந்து வைக்கின்றன; அவர்களுடைய சிந்தனைகளுக்கு உற்ற துணையாகவும் விளங்குகின்றன.

எதிர்க் கட்சியார் போற்றும் கொள்கைகளோ, அவர்களிடையிலே மட்டும் உலவி வருகின்றன. பொது மக்கள் அவைகளைத் தீண்டுவதில்லை. அவைகளுக்கு எப்போதும் இடைவிடாமல் ஆட்சேபங்கள் தோன்றிக் கொண்டே யிருக்கின்றன. சில சமயங்களில் அக் கொள்கைகள் பத்து ஆண்டுகள் கூட நிலைத்து நிற்பதில்லை. அவை தோன்றும்போதே மக்கள் அவைகளை மறந்துவிடுகின்றனர். ஆயினும் இந்தக் காரணங்கள் அனைத்தும் எதிர்க் கட்சியாரைச் சிறிதும் பாதிப்பதே யில்லை.

மனித சமுதாயத்தைப் பற்றிய இக் கால ஆராய்ச்சிகள் சொல்லும் பாதை தவறாயுள்ளது. பண்டைத் தீர்க்கதரிசிகளின் கொள்கைகளுக்கு இந்த ஆராய்ச்சிகளில் உரிய மதிப்பு அளிப்பதில்லை. எந்தக் கொள்கைகளால் சமுதாயம் நன்கு வாழ்ந்துவந்ததோ, எவைகளால் அது உருவாக்கப்பெற்றதோ, எவைகளைப் பின்பற்றிச் சமுதாயம் இன்றும் வாழ்ந்து உருவாகிவருகின்றதோ, அவைகள் இதுகாலை இகழப்படுகின்றன.

உலகத்தைப் பற்றிய செய்திகள், புள்ளி விவரங்கள் அடங்கிய நூல்களில் இப்போது உலக மக்கள் பின்பற்றும் சமயங்கள் ஆயிரம் இருப்பதாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. பௌத்த தர்மம், இந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/22&oldid=1121987" இருந்து மீள்விக்கப்பட்டது