பக்கம்:வாழ்க்கை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

வாழ்க்கை


மதம், கன்பூஷியஸ் மதம், டாவோ சமயம், கிறிஸ்தவ மார்க்கம் ஆகியவைகளும் அந்த ஆயிரத்துள் அடக்கம் போலும்! ஆயிரம் சமயங்கள் ! இந்தக் கூற்றை நம் காலத்து மக்களும் நம்புகிறார்கள் ! ‘ஆயிரம் மதங்கள் இருக்கின்றன; எல்லாம் ஆராய்ச்சிக்குப் பொருத்தமில்லாதவை; நாம் ஏன் அவைகளை வீணாகப் பயில வேண்டும்?’- இப்படிக் கூறும் மனிதர்களே, ஸ்பென்ஸர்,[1] ஹெம் ஹோல்ட்ஸ்[2] முதலியோர் சமீபத்தில் கூறிய விஷயங்களைக்கூட நாம் அறிந்திராவிட்டால் கேவலம் என்று கருதுகின்றனர். வேத ரிஷிகள், புத்தர், கன்பூஷியஸ், லாவோத்ஸே, எபிக்டெடஸ்,[3] இஸையா-இவர்களுடைய பெயர்களையாவது அந்த மனிதர்கள் கேள்விப்பட்டிருப்பார்களோ என்னவோ!

இக் காலத்தில் மக்கள் பின்பற்றும் சமயங்கள் ஆயிரமல்ல, மூன்றுதாம் என்பது அவர்களுக்குப் புலனாவதில்லை. சீன மதம், இந்திய மதம், யூத-கிறிஸ்தவம் (இதன் கிளை இஸ்லாம்) என்பவையே அந்த மூன்று சமயங்கள். இந்தச் சமயங்களைப் பற்றிய நூல்களை ஏழெட்டு ரூபாய்க்கு வாங்க முடியும். இரண்டு வாரங்களில் அவைகளைப் படித்து முடிக்கலாம். (காடுகள், ஒதுக்கமான தீவுகள் முதலிய இடங்களில் வசிக்கும்) நூற்றுக்கு ஏழு பேர் நீங்கலாக மற்ற மனித சமுதாயம் முழுதும் இந்த நூல்களைப் பின்பற்றியே வாழ்ந்து வந்திருக்கிறது; இன்றும் வாழ்ந்து வருகின்றது. இந் நூல்கள் மானிட


  1. Spencer
  2. Helmholtz
  3. Epictetus
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/23&oldid=1121993" இலிருந்து மீள்விக்கப்பட்டது