பக்கம்:வாழ்க்கை.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18
வாழ்க்கை
 

ஒரு பிராணி உயிரோ டிருந்து தீர்ந்து போகிறது. வாழ்க்கை இருந்தது; வாழ்க்கை முடிந்தது. இதயத் துடிப்பு, மூச்சுப் பைகள் மூச்சு வாங்கி விடுதல், உடல் பதனழியாமல் இருத்தல் ஆகியவற்றால் மனிதன், நாய், அல்லது குதிரை வாழ்வதை நாம் அறிகிறோம். இதயத் துடிப்பு நின்று போகிறது. மூச்சுப்பைகள் சுவாசிப்பதில்லை. உடல் உலைய ஆரம்பிக்கிறது. அப்போது மரணம் வந்துவிட்டது, வாழ்க்கை முடிந்துவிட்டது என்று அறிகிறோம். எனவே, வாழ்க்கை பிறப்புக்கும் சாவுக்கும் நடுவிலுள்ள காலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் தொகுதியே இதைவிட வேறு எது தெளிவாயிருக்க முடியும்?’

விலங்கு நிலையிலிருந்து சற்று மேலே உயர்ந்து வரும் மனிதன், ஆதி முதல் வாழ்க்கையைப் பற்றி இப்படித்தான் கருதி வந்தான். இந்தக் கேவலமான பழைய கருத்தே இக் காலத்தில் விஞ்ஞானத்தின் பெயரால் கூறப்படுகிறது. மனித சமுதாயம் ஆராய்ச்சிக்காகக் கண்டுபிடித்துள்ள நுண்ணிய கருவிகளை யெல்லாம் பயன்படுத்திக் கொண்டு விஞ்ஞானம் கண்டுபிடித்துக் கூறுவது இந்தப் போலிக் கொள்கைதான். ஆயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன், எவ்வளவோ முயற்சியாலும் உழைப்பாலும், மனிதனை அறியாமை இருளிலிருந்து கரையேற்றி விட்டதை மாற்றி, மறுபடியும் அவனை அதே அந்தகாரத்திற்கு அழைத்துச் செல்வதே இக் கொள்கையின் நோக்கம்.

வாழ்க்கையை உணர்ச்சியால் விளக்க முடியாதாம். நன்மை அடைய வேண்டும் என்ற ஆவலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/25&oldid=1121996" இருந்து மீள்விக்கப்பட்டது