பக்கம்:வாழ்க்கை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

21


தான் நசித்துவிடாமல் காத்துக்கொள்ளல், மனித சமூகம் நசித்துவிடாமல் காத்தல், உயிர் வாழ்வதற்காகப் போட்டியிடல்- இவைகளே அந்த லட்சியங்கள். இவை மனிதனுடைய இயற்கையான லட்சியங்கள் அல்ல ; ஆனால், இவைகளைப் போலி விஞ்ஞானம் அவன் தலைமீது ஏற்றிவைக்கின்றது.

உண்மையை அறிய முடியாத இந்த விஞ்ஞானம் பண்பற்ற பாமர மக்களின் ஆசைக்குத் தக்கபடி தாளம் போடுகிறது. மனிதன் உயிர் வாழ்வதற்காகவும், தன் இனத்தை விருத்தி செய்து கொள்வதற்காகவும், சமூகத்தைப் பாதுகாப்பதற்காகவும் மற்ற மிருகங்களைப் போல் போராடி வருவதே வாழ்க்கை என்று இந்த விஞ்ஞானம் உறுதிப் படுத்துகிறது. மனிதன், தன் அறிவு கொஞ்சம் விருத்தியானவுடனேயே, இக்கொள்கை தன் உணர்ச்சிக்குப் பொருத்தமில்லை என்று உதறிவிட்டான்.

வழக்கமே வழிகாட்டி

போலிப் போதனைகளைக் கேட்டு மயக்கமடைந்த ஜனங்கள், ‘வாழ்க்கையை விளக்க வேண்டிய அவசியமில்லை. எது வாழ்க்கை என்பது எல்லோருக்கும் தெரியும். அதுவே போதும். ஆகையால், நாம் பேசாமல் வாழ்வோம்’ என்று சொல்லலாம். வாழ்க்கையையும், அதன் நன்மை எதிலிருக்கிறது என்பதையும் அறியாமலே, அவர்கள் தாங்களும் வாழ்வதாக எண்ணிக்கொள்வார்கள். வெள்ளத்திலே அலைகள் ஒருவனை அடித்துக் தள்ளிக்கொண்டு போகும்போது, அவன் தான் விரும்பிய இடத்திற்கு நீந்திச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/28&oldid=1122043" இலிருந்து மீள்விக்கப்பட்டது