பக்கம்:வாழ்க்கை.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
23
வாழ்க்கை
 

தில் இவர்களுக்குக் குடும்பங்கள் ஏற்பட்டுப் பெருகும்போது, உடல் வாழ்வுக்கு அவசியமான நன்மையை அடைவதற்கு ஆத்திரமும் அதிகமாகின்றது.

அந்த ஏழைக்கோ, பணக்காரனுக்கோ ஏதாவது ஒரு சமயம் சந்தேகம் தோன்றலாம் : ‘ஒரு லட்சியமும் அல்லாமல் இது என்ன வாழ்க்கை ? கேவலம் உயிர் வாழ்வதற்காகப் போராடுவது ஏன் ? நம் குழந்தைகளும் அப்படித்தானே போராடியாக வேண்டும்? இன்பங்களைத் தேடித் தேடி ஏமாந்துபோய், முடிவில் துன்பங்களைப் பெறுவது எதற்காக? நமது கதிதானே நம் மக்களுக்கும் ஏற்படும்?’ என்று அவர்கள் சிந்திக்க நேரலாம். இந்தக் கேள்விகளுக்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன்னரே பதில் கூறப்பட்டிருக்கிறது. மனித சமூகத்திற்கு அறத்தை உணர்த்திய ஆதி மகான்கள் வாழ்க்கையைப் பற்றி அருளிய விளக்கங்களே இவைகளுக்குத் தக்க பதிலாகும். ஆனால், இந்த விளக்கங்களைத் தெரிந்து கொள்ளப் பலருக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை.

போலி விஞ்ஞானிகள், போலிச் சமயவாதிகளுடைய கொள்கைகள் இந்த விளக்கங்களைக் கவனமாக மூடி மறைத்துவிடுகின்றன. மிகச் சிலரே இவைளைக் காண முடிகிறது.

வாழ்க்கையை ஏன் துன்பமயமாக இருக்கிறது ?

போலிச் சமயவாதிகள் இந்தக் கேள்விக்குக் கூறும் விடை இது தான் : ‘வாழ்க்கை துன்பமயந்தான். எப்போதும் இப்படியே இருந்து வந்தது ; இனியும் இப்படித்தான் இருக்கும். வாழ்க்கையின் நலன் என்பது இப்போது ஒன்றும் கிடைக்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/30&oldid=1122046" இருந்து மீள்விக்கப்பட்டது