பக்கம்:வாழ்க்கை.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
27
 

ஒருவரைப் பார்த்து ஒருவர் தவறான பாதையில் இறங்குகின்றனர். மக்கள் காரியங்களுக்கு உரிய காரணங்கள் தங்களுக்குப் புரியாவிட்டால், அவைகள் எங்கோ கோபமாயமாய் மறைந்திருப்பதாக நம்புகின்றனர். மொத்தத்தில் வழக்கத்தால் ஏற்படும் செயல்களே ‘கடமைகள்’ என்றும், ‘புனிதமான கடமைகள்’ என்றும் வழங்கி வருகின்றன.

புதிதாக உலகத்திலே தோன்றும் குழந்தைகள் வளர்ந்து, வயது வந்த பிறகு, வாழ்க்கை என்ற பெயரால் இங்கே நடைபெற்று வரும் குழப்பத்தைப் பார்க்கின்றனர். இந்தக் குழப்பத்தில் தலை நரைத்த கிழவர்களும் பங்குகொண்டிருப்பதைக் கவனிக்கின்றனர். அறிவற்ற இந்தக் குழப்பமே வாழ்க்கை என்று அவர்கள் திடமாக நம்பவும் முற்படுகின்றனர். அவர்ளும் இவ்வுலகின் வாயிற்படியிலேயே நின்று, வருவார் போவார்மீது மோதிவிட்டுத் தங்கள் காலம் முடிந்தபின் தாங்களும் சென்றுவிடுகின்றனர்.

ஒரு மண்டபத்தினுள்ளே பொதுக்கூட்டம் ஒன்று நடைபெறுகின்றது. வெளியிலே மண்டப வாயிலிலும் ஜனத்திரள் முண்டி நெருக்கிக்கொண்டு நிற்கிறது. அந்த வெளிக்கூட்டத்தினுள்ளே சிக்கி உதையும் மிதியும் வாங்கிக்கொண்டு திரும்பிய ஒருவன், தானும் சொற்பொழிவில் கலந்துகொண்டதாக எண்ணுவது போல்தான் மேலே கூறியுள்ள அநுபவமும்.

மலைகளைக் குடைகிறோம்; கடல்களின் வழியே கண்டங்களைச் சுற்றி வருகிறோம்; மின்சாரம், பூதக் கண்ணாடி, தூரதிருஷ்டிக் கண்ணாடி முதலிய கருவிகளைக் கண்டுபிடித்திருக்கிறோம்; போர்கள், சட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/34&oldid=1122050" இருந்து மீள்விக்கப்பட்டது