பக்கம்:வாழ்க்கை.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28
வாழ்க்கை
 

சபைகள், அறநிலையங்கள், சர்வ கலாசாலைகள், ஆராய்ச்சி மன்றங்கள், கண்காட்சி சாலைகள், அரசியல் கட்சிகள், கட்சிச் சண்டைகள் - இவைகளெல்லாம் வாழ்க்கையல்லவா ?

மக்கள் எவ்வளவோ வர்த்தகம் செய்கிறார்கள்; போர்கள் நடக்கின்றன; போக்குவரத்து சாதனங்கள் பெருகுகின்றன; விஞ்ஞானம், கலை முதலியவைகளுக்காக ஜுர வேகத்தில் வேலைகள் நடக்கின்றன. ஆயினும் இவை யாவும் மேலே கூறிய மண்டப வாயிலில் நெருக்குண்ட கும்பலின் அறிவற்ற குழப்பத்தைப் போன்று, வாழ்க்கையின் முன்வாயிலில் நடக்கும் பூசலேயாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/35&oldid=1122051" இருந்து மீள்விக்கப்பட்டது