பக்கம்:வாழ்க்கை.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


3
மிருக வாழ்க்கையும் மனித வாழ்க்கையும்

நல்ல வாழ்க்கை வேண்டும்; வாழ்வதில் அர்த்தம் இருக்க வேண்டும் என்பதுதான் ஆன்மாவின் அந்தரங்க வேட்கை. மரணத்துக்குப் பின்பே நல் வாழ்வு உண்டாகும் என்பதை எவ்வளவு அழுத்திச் சொன்னாலும், எத்தனை முறை சொன்னாலும், மனிதனுக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை.

எதிர்கால வாழ்வில் நம்பிக்கை வைக்க முடியுமா ? இப்போது கிடைத்துள்ள வாழ்வே பொருளற்றதாயிருக்கும் போது, இனி வருவது பொருத்தமான பெருவாழ்வாயிருக்க முடியுமா? அது சரியானதாயிருக்க முடியாது என்றே மனிதன் நம்புகிறான்

ஒருவன் தனக்காகவே வாழ்வதா ? தனிப்பட்ட வாழ்க்கை தீமையாயும் பொருளற்றதாயும் இருக்கிறதே! மனிதன் தன் குடும்பத்திற்காக வாழ்வதா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/36&oldid=1122052" இருந்து மீள்விக்கப்பட்டது