பக்கம்:வாழ்க்கை.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
30
வாழ்க்கை
 

அல்லது தான் வசிக்கும் இராஜ்யத்திற்காகவோ, சமுதாயத்திற்காகவோ வாழ்வதா ? எனது தனி வாழ்க்கை அர்த்தமற்ற துன்ப மயமாக இருப்பதை நான் அறிவேன். இதுபோல்தானே மற்ற மனிதர் ஒவ்வொருவருடைய நிலையும் இருக்கும்? எண்ணற்ற மக்கள் அறிவுக்குப் பொருத்தமில்லாது, பொருள் ஒன்றும் இல்லாது, பயிர்கொண்டு உலவி வருகின்றனர். இவர்கள் அனைவரும் எல்லோருக்கும் பொருத்தமாயுள்ள ஒரே நன்மையான வாழ்வில் ஒன்றுகூடிவிட மாட்டார்கள். தனிப்பட வாழ்தலின் பொருள் என்ன ? இதை அறியாமல், மற்றையோர் செய்வதை நானும் செய்து கொண்டிருக்கிறேன் ஆனால், அவர்களும் என்னைப் போலவேதான் இருக்கிறார்கள் ; அவர்கள் செய்வதை ஏன் செய்கிறார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது என்பது எனக்குத் தெரியும்.

ஒரு காலம் வருகிறது ; அப்போது பகுத்தறிவு உணர்ச்சி போலிக் கொள்கைகளைத் தாண்டி வளர்ந்து விடுகிறது. வாழ்வின் நடுப் பாதையிலே மனிதன் நின்று யோசிக்க ஆரம்பிக்கிறான். வாழ்வின் பொருளைப் பற்றி அவன் வினவுகிறான்.

போலிக் கொள்கைகள் அம்பலமாகும் காலம் வந்துகொண் டிருக்கிறது. பெரும்பாலான மக்கள் விரைவில் உண்மையைத் தெரிந்துகொள்வர். அப்போது, வறுமையால் கசக்கிப் பிழியப்பட்டவர்களும், போக வாழ்க்கையில் புத்தியைப் பறிகொடுத்தவர்களுமே தங்கள் வாழ்வின் பொருளற்ற தன்மையையும் இழி நிலையையும் உணராமல் இருப்பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/37&oldid=1122053" இருந்து மீள்விக்கப்பட்டது