பக்கம்:வாழ்க்கை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

33


கின்றன. தாவரங்களும், புழுப் பூச்சிகளும், விலங்குகளும் தமக்கு உரிய நியதிகளுக்கு உட்பட்டு வாழ்கின்றன ; அதனால் இன்பமான, அமைதியான நல்வாழ்வைப் பெறுகின்றன. மனிதனுக்கு மற்ற உயிர்களினும் கூடுதலான ஆறாவது அறிவு ஒன்று கிடைத்திருக்கிறது. அந்த அறிவு அவனுக்கு எவ்வளவு அநுகூலமா யிருந்தபோதிலும், அதுவே அவனைச் சித்திரவதை செய்கிறது ; மனச்சாந்தியே இல்லாமற் செய்கிறது. இது விபரீதமாகவே தோன்றும்! உள்மனத்தில் நடக்கும் இந்தப் போராட்டம் நம் காலத்தில் உச்ச நிலையை அடைந்திருக்கிறது.

குழப்பத்தால் வந்த முரண்பாடு

மனிதன் இளமைப் பருவத்தைத் தாண்டி வளர்ந்து வருகையில் ஏதாவது ஒரு சமயத்தில் பகுத்தறிவு உணர்ச்சி அவன் உள்ளத்தில் தலைதூக்கி நிற்பதை உணர்கிறான். இவ்வாறு புதிதாக எழுந்துள்ள பகுத்தறிவு உணச்சி அவன் வாழ்வை இரு கூறாக்கி, வாழ்வையே தடைப்படுத்தி நிறுத்துவது போல் அவனுக்குத் தோன்றுகிறது. ஏனெனில், அவன் தனக்குச் சொந்தமில்லாத ஒன்றைத் தன் வாழ்க்கை என்று மயங்கி நிற்கிறான். அந்த ஒன்று என்றுமே அவன் வாழ்க்கையாக இருந்ததில்லை ; இருக்கப் போவதுமில்லை. நவீன உலகிலே நடை பெறும் தவறான போதனைகளே மனிதனின் மயக்கத்திற்குக் காரணமாயுள்ளன.

பகுத்தறிவு உணர்ச்சி விழிப்படைந்த பிறகு மனிதன் தன் வாழ்வே மாறிவிட்டதாக எண்ணு

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/40&oldid=1123796" இலிருந்து மீள்விக்கப்பட்டது