பக்கம்:வாழ்க்கை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

35


பட்ட வாழ்க்கையில் நன்மை இருக்க முடியாது என்று மறுத்து, வாழ்க்கையின் முரண்பாட்டை வெட்ட வெளிச்சமாக்குகின்றது.

மனிதன் வாழ்க்கை எவ்வளவு காலம் நிலைத்திருக்கிறது என்பதைக் கணக்கிட்டுப் பார்த்து அதை விளக்க விரும்புகிறான். தன் உடல் எவ்வளவு காலம் நிலைக்கிறது என்று பார்ப்பது போலவே, அவன் வாழ்க்கையையும் காலத்தின் உதவியால் தெளிவு படுத்த ஆசைப்படுகிறான். ஆனால் திடீரென்று அவனிடம் ஒரு புது வாழ்க்கை எழும்போது, ‘இது என் உடல் தோன்றும்போது இல்லையே ! இது எப்பொழுது தோன்றிற்று? இந்தப் புது வாழ்வுக்குக் காரணமான பகுத்தறிவு உணர்ச்சி பிறவியிலிருந்தே என்னுள் மறைந்து இருந்து வந்ததா?’ என்று ஆச்சரியப்படுகிறான். காலத்தையும் இடத்தையும் வைத்தே அவன் எல்லாப் பொருள்களையும் பிரித்து அறிய முடிகிறது. ஆனால், பகுத்தறிவு உணர்ச்சி சம்பந்தமாகக் காலமும் இடமும் அளவுகோல்களாக உதவ முடியாது.[1]


  1. பொதுவாக உயிர் எப்படி உண்டாயிற்று என்றும், மனித உயிரின் தோற்றம், வளர்ச்சி பற்றியும் விவாதங்கள் நடப்பதை அடிக்கடி காண்கிறோம். விவாதம் செய்பவர்கள் உண்மையை நேரிலே கண்டவர்கள்போல எண்ணிக்கொண்டு பேசுவார்கள். காலத்தை வைத்துக்கொண்டு உயிரின் வளர்ச்சியைப் பற்றி அவர்கள் கூறும் வாதங்களைப் பார்க்கினும் கற்பனை மிகுந்தவை வேறு இருக்க முடியாது. மானிட உயிரின் ஆரம்பத்தை எதிலிருந்து கணக்கிடுவது ? உயிரின் ஆரம்பம் தாயின் கர்ப்பத்திலா, குழந்தை மண்மீது பிறந்தவுடனா. அல்லது பெற்றோர்களின் பிறப்பிலா, அல்லது எல்லாவற்றிற்கும் முன்னால் மனிதன் விலங்கு உருவத்தில் இருந்த நிலையிலா ? அல்லது உயிர் உண்டாவதற்கு ஏற்ற மூலமான சடப்பொருள் என்று கருதப் பெறும் ‘பிராடோ பிளாஸம்’ (Protoplasm) என்பதிலிருந்து உயிர் தோன்றியதாகக் கொள்வதா ? சூரியனிலிருந்து ஒரு பகுதி தெறித்து விழுந்து நாளடைவில் அப்பகுதியின் கொதிப்பு அடங்கிக் குளிர்ந்துவிட்டதாம். அந்தக் குளிர்ச்சியடைந்த பகுதியில் உயிர் உண்டாவதற்கு ஏற்ற ‘பிராடோபிளாஸம்’ ஏற்பட்டதாம். இத்தகைய விவாதங்கள் எல்லாம் அளவுகோல் இல்லாமலே அளக்கும் கற்பனை விஷயங்களேயாகும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/42&oldid=1122059" இலிருந்து மீள்விக்கப்பட்டது