பக்கம்:வாழ்க்கை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

வாழ்க்கை


பாடம். பகுத்தறிவு உணர்ச்சியின் துணையால் பின்னால் உண்மையான வாழ்க்கையை அவன் தெரிந்து கொண்டதும், முந்திய (கற்பனை) வாழ்க்கை ஒன்று, உண்மையான வாழ்க்கை வேறு ஒன்று என்று எண்ணுகிறான்.

பகுத்தறிவு உணர்ச்சி, அவனுடைய சொந்த நன்மைக்கான தனி வாழ்க்கை என்பது பொய் என்றும், வேறு ஒரு நலனுக்காக அவன் ஈடுபட வேண்டும் என்றும் வழிகாட்டும்போது, அது இயற்கைக்கு மாறுபட்டதாக அவனுக்குத் தோன்றுகிறது அதனால் நன்மையில்லை என்றும் என்றும் எண்ணுகிறான்.

ஆனால், தனி நபரின் நன்மையும், தனிப்பட்ட வாழ்க்கையும் சாத்தியமில்லை என்பதைப் பகுத்தறிவு பெற்ற மனிதன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. பகுத்தறிவு உள்ளவன் தனி வாழ்க்கையின் நலனைத் தியாகம் செய்தல், பறவை தன் கால்களால் நடக்காமல் சிறகுகளால் பறப்பது எவ்வளவு இயற்கையான செயலோ அவ்வளவு இயற்கையாகும். பறக்க வேண்டிய பெரிய பறவை ஒன்று கால்களால் ஓடிச்சென்றால், அதிலிருந்து பறத்தலே இயற்கைக்கு மாறுபாடு என்று ஆகிவிடாது. அதுபோல் தான் நம்மைச் சுற்றிலும் வாழும் பகுத்தறிவு விழிப்படையாமலுள்ள மனிதர்கள் நிலையும். அவர்கள் தங்கள் சொந்த நலனே வாழ்க்கை என்று கருதி வந்தால், நாம் அறிவுக்குப் பொருத்தமாக வாழ ஆரம்பித்தல் இயற்கைக்கு முரணாக ஆகிவிடாது.

பகுத்தறிவுப் புது வாழ்வு பெறும் மனிதர்கள் அடையும் வேதனை, பருவமடையும் யுவதிக்குரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/45&oldid=1122062" இலிருந்து மீள்விக்கப்பட்டது