பக்கம்:வாழ்க்கை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

வாழ்க்கை


தறிவின் விதியை அவனாக நிறைவேற்ற வேண்டும். அதாவது, அவன் தனது மிருக இயல்பு பகுத்தறிவின் விதிக்குப் பணிந்து நடக்கும்படி கவனிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், மற்ற மிருகங்களுக்கும் அவனுக்கும் வேற்றுமை யில்லை. மிருகங்கள் தம் இயல்புப்படியே அலைந்து திரிந்து இன்புறுகின்றன. மனிதன் தானும் விலங்கு போல் தனி இன்பத்தை நாடித் திரிந்து கொண்டிருக்க முடியாது. இன்பமெல்லாம் துன்பமாவே முடிவாக மேலே கண்டோம். மிருக வாழ்க்கை நம் வாழ்க்கையாக இருக்கவே முடியாது.

மிருகப் பான்மையுள்ள நம் உடல்களையே ‘நாம்’ என்று எண்ணி, உடலுக்கு உரிய சட்டத்தையே நமது வாழ்க்கையின் விதியாகக் கருதுவது தவறாகும். மக்கள் தொன்று தொட்டே இந்தத் தவறுதலைச் செய்து வருகிறார்கள். மக்கள் அறிய வேண்டிய முக்கியமான பொருளை அறிய முடியாமல் இந்தத் தவறு மறைத்துவிடுகின்றது. மிருக இயல்புள்ள நமது அகங்காரத்தைப் பகுத்தறிவுக்குப் பணிந்திருக்கச் செய்வதை அறிந்து கொள்வது தான் அந்த முக்கியமான பொருள். அவ்வாறு பணிந்து நடக்காமலிருந்தால், வாழ்க்கையின் நன்மையை அடைய முடியாது. இந்த நன்மையைப் பெறுதலை ஒதுக்கிவிட்டு, மனிதர் உயிரோடிருப்பதை மட்டும் ஆராய்ச்சி செய்வதில் நாம் தவறாக முற்படுகிறோம்.

வாழ்வில் இன்பம் அடைவதற்காக நமது மிருக இயல்பு எந்த விதிக்குப் பணிய வேண்டுமோ அதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/53&oldid=1123804" இலிருந்து மீள்விக்கப்பட்டது