பக்கம்:வாழ்க்கை.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
47
 

பற்றி ஆராய்வதே முதன்மையான அவசியம் உலகிலுள்ள மற்ற எல்லாப் பொருள்களின் ஆராய்ச்சிகளும் இதற்குப் பின்னால் வரவேண்டியவை. போலி விஞ்ஞானம் இந்த முறையைத் தலைகீழாக மாற்றியுள்ளது. இந்த விஞ்ஞானம் மனிதனின் மிருக வாழ்கையையும், சுக வாழ்வையும் பற்றி ஆராய முற்பட்டு, மூலாதாரமான முதல் ஆராய்ச்சியைக் கைவிடுகின்றது. மனிதனை விலங்காகவே கருதி இது ஆராய முற்படுகின்றது.

போலி விஞ்ஞானத்தின் வாதம் இதுதான்: ‘மனிதர்கள் இப்பொழுது வாழ்கிறார்கள் ; நமக்கு முன்னாலும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை முன்னால் எப்படியிருந்தது என்பதைப் பார்ப்போம் ; காலத்தாலும் இடத்தாலும் அவ் வாழ்க்கை என்னென்ன மாறுதல்களை அடைந்தது என்று கவனிப்போம். சரித்திர பூர்வமான இந்த மாறுதல்களிலிருந்து மானிட வாழ்வின் சட்டத்தைக் கண்டுபிடிப்போம்.’

போலி விஞ்ஞானிகளின் இலட்சியமே- குறிக்கோளே- இத்தகைய ஆராய்ச்சி பயனற்றது என்று தீர்ப்புக் கூறுவதாக இருக்கிறது. ஏனெனில், மனிதன் உண்மையான இன்பத்தை அடைவதற்காக அவனது மிருக இயல்பான அகத்தை ஆண்டு அடக்கவேண்டிய பகுத்தறிவின் விதியை ஆராயாமல், மற்ற ஆராய்ச்சிகளைச் செய்வதால் என்ன பயன் விளையும்? மேலும், மிருக வாழ்க்கைக்கு உரிய பொது விதி ஒன்றினாலேயே மனித வாழ்க்கையும் மாறி வருவதாயிருந்தால், இந்த விதிகளைப் பற்றி ஆராய்வதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/54&oldid=1122079" இருந்து மீள்விக்கப்பட்டது