பக்கம்:வாழ்க்கை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

49


கொள்வது கஷ்டமாயுள்ளது. இவை விடுக்க முடியாத சிக்கலை உண்டாக்கி விடுகின்றன. ஆகவே மானஸீக சக்திகள் இல்லாத விலங்குகளையும் தாவரங்களையும் முதலில் ஆராய்ந்து பார்ப்போம். விலங்குகளுக்கு உரிய விதிகள் மனிதர் விதிகளைவிட எளிதில் புரியக் கூடியவை ; அவைகளைப் பார்க்கிலும் சடப்பொருள்களின் விதிகள் மேலும் எளிதானவை. முதலில் சடப்பொருள்களையும் ஆராய்ந்து, பிறகு தாவரங்களையும் விலங்குகளையும் கவனிக்கலாம். மனிதனின் உடல் சடப்பொருள்களால் ஆக்கப்பட்டிருப்பதால், அவைகளைக் கொண்டே மனிதனையும் அறிந்து கொள்ளலாம். சடப் பொருள்களின் விதிகளே அவன் நடவடிக்கைகளுக்கும் காரணமா யிருப்பவை.

மிருகங்களிடத்திலும், தாவரங்கள், சடப்பொருள்களிடத்திலும் இல்லாத ஒரு பொருள் மனிதனிடம் இருக்கிறதே என்ற விஷயம் இந்த ஆராய்ச்சியாளரைப் பாதிப்பதில்லை. அந்த ஒரு பொருளைப் பற்றி அறிய வேண்டியதே பயனுள்ள ஆராய்ச்சி என்பதும், அது இல்லாமல் மற்ற அறிவெல்லாம் பயனற்றவை என்பதும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை.

உடலிலுள்ள சடப் பொருளில் ஏற்படும் மாற்றங்கள் மனிதனின் செயல்களைப் பாதிக்கின்றன என்றால், அவன் செயல்களுக்கெல்லாம் பொருளின் இயக்கமே காரணம் என்று கூறிவிட முடியுமா ? வேரடியிலுள்ள மண்ணை எடுத்தால் செடிக்குக் கேடு விளையும். இதனால் மண் ஒன்றினாலேயே செடி உண்டாயிற்று என்று ஆகிவிடாது.

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/56&oldid=1122082" இலிருந்து மீள்விக்கப்பட்டது