பக்கம்:வாழ்க்கை.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.1
மானிட வாழ்வின் முக்கிய முரண்பாடு

மனிதன் தன் சொந்த இன்பத்திற்காகவே வாழ்கிறான். ஒவ்வொருவனும் தனது நலனுக்காகவே வாழ்கிறான். சொந்த நன்மையில் நாட்டமில்லாமற் போனால் மனிதன் தான் உயிருடன் வாழ்வதாகவே எண்ணுவதில்லை. தன் சுயநலத்தைச் சேர்க்காமல் தனியாக வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கவே அவனால் முடிவதில்லை. தன் நன்மையை நாடுதலும், அதை அடைதலுமே வாழ்க்கை என்பது அவன் கருத்து. மனிதன் தன்னையும் தன் தனித் தன்மையையும் கொண்டே வாழ்க்கையைப் பற்றி உணருகிறான். அதனால் தான் அவன் விரும்பும் நன்மை என்பது தன் தனி நலம் என்று ஆரம்பத்தில் நம்புகிறான். வாழ்க்கை - உண்மையான வாழ்க்கை, தன் சொந்த வாழ்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/6&oldid=1121480" இருந்து மீள்விக்கப்பட்டது