பக்கம்:வாழ்க்கை.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
53
 

கூறுவதை மட்டும் அறியாதிருப்பதாயும் கற்பித்துக் கொள்கிறான்.

நன்மையான விஷயங்களை அவன் அறிந்து கொள்ள முடியவில்லை ; முக்கியமாகத் தனக்கு நன்மையானவற்றையும் தெரிந்துகொள்ள முடியாது என்று கருதுகிறான் ; தனக்குள்ளேயே இருக்கும் பகுத்தறிவு உணர்ச்சியையும் அறிய முடியாது என்பது அவன் எண்ணம். ஆயினும், தன் மிருக இயல்பைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள முடியும் என்றும் பொதுவாக மிருகங்களையும் தாவரங்களையும் பற்றி மேலும் அதிகமாய்த் தெரிந்துகொள்ள முடியும் என்றும், சடப் பொருள்களையும் பலதிறப்பட்ட சேர்க்கைகளாயுள்ள பொருள்களையும் இன்னும் அதிகமாய்த் தெரிந்துகொள்ள முடியும் என்றும் அவனுக்குத் தோன்றுகிறது.

மனிதனுடைய கண் பார்வையே ஒரு மாதிரியானதுதான். அவன் பக்கத்திலுள்ள பொருள்களை விட்டுவிட்டுத் தன்னை அறியாமலே வெகு தூரத்திலுள்ள பொருள்களிலே பார்வையைச் செலுத்துவது வழக்கம். அவைகளின் உருவங்களும், நிறங்களும் தெளிவாய்த் தெரிவதாக எண்ணுவான். ஆகாயம், அடிவானம், தூரத்திலுள்ள நிலங்கள், காடுகள் முதலியவைகளைப் பார்த்து, அவன் இவ்வாறு கருதுவது வழக்கம். உண்மை என்னவென்றால், தூரத்துப் பொருள்களின் உருவ அமைப்புக்கள் தெளிவாய்த் தெரிவதில்லை. அவைகளின் நிற வித்தியாசங்களும் புலப்படாமல் ஒரே வர்ணமாகத் தெரியும். ஆயினும், மனிதன், அவைகளைப் பார்ப்பது எளிது என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/60&oldid=1122089" இருந்து மீள்விக்கப்பட்டது