பக்கம்:வாழ்க்கை.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
55
 

அவனுக்கு அறிவுறுத்துவது பகுத்தறிவு என்பதும் தெரியும். பகுத்தறிவுக்கு அடங்கியுள்ள மிருக இயல்பைப் பற்றி அடுத்தபடியாக அவன் அறிவான். இதற்குப் பிறகுதான் அவன் காலத்திலும் இடத்திலும் தோன்றும் மற்றைப் பொருள்களை யெல்லாம் காண்கிறான்- காண்கிறானே தவிர, அறிந்துகொள்வதில்லை.

மனிதன் தன்னை- தன் மிருக இயல்பை- உணர்ந்து கொள்வதோடு அவனுடைய உண்மையான அறிவு பூர்த்தியாகிறது. அவனுடைய மிருக இயல்பு நன்மையை நாடிச் செல்கின்றது. அது பகுத்தறிவின் விதிக்கு உட்பட்டிருக்கிறது. மிருக இயல்புள்ள உடலில் அவன் தன்னை அறிந்து கொள்கிறான். காலத்திலும் இடத்திலும் அவன் சம்பந்தமுள்ளவன் என்பதால் இந்த அறிவு ஏற்படுவதில்லை. (காலத்திலும் இடத்திலும் தான் பரிணமித்து வந்தவன் என்பதை அவன் கண்டு கொள்ளவே முடியாது.) பகுத்தறிவின் விதிக்கு அடங்கி நன்மையை நாட வேண்டும் என்று அவன் கட்டாயப் படுத்தப்படுகிறான். அதனால் தான் அவன் உண்மையை உணர முடிகின்றது. உடலாகிய மிருகத்தினுள் தான் காலத்தையும் இடத்தையும் கடந்து நிற்பதை அவன் உணர்கிறான். காலத்திலும் இடத்திலும் தனக்குரிய ஸ்தானம் எது என்பதைப் பற்றி அவன் சிந்திக்கும் போது, அவன் இருக்கும் காலத்திலிருந்து இரண்டு பக்கங்களிலும் விரிந்து செல்லும் எல்லையற்ற காலமே அவனுடைய காலமாகத் தோன்றுகிறது ; அவன் இருக்கும் இடத்தை ஒரு மையப் புள்ளியாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/62&oldid=1122094" இருந்து மீள்விக்கப்பட்டது