பக்கம்:வாழ்க்கை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

57


களைப் பற்றித் தெரிந்து கொள்கிறான். உலகம் எங்கும் நிறைந்துள்ள உயிரற்ற சடப் பொருள்களைப் பற்றிய அறிவை மேலும் குறைந்த அளவிலேயே பெற முடிகிறது. சடப் பொருள்கள் பற்பல விதமான உருவங்களில், காலத்திலும் இடத்திலும் எல்லையற்றனவாக இருப்பதால், மளிதன் அவைகளையெல்லாம் தான் கண்டுகொள்ள முடியாதென்று மனக்கண்ணாலே கற்பனை மட்டும் செய்துகொள்கிறான்.

மனிதனும் பிற பொருள்களும்

நமக்குத் தெளிவாகப் பொருள் விளங்கக் கூடிய சில வார்த்தைகளைப் பார்ப்போம்: “நாய் வேதனைப்படுகிறது; கன்று என்னிடம் பிரியமாயிருக்கிறது; பறவை இன்பமா யிருக்கிறது ; குதிரை வெருவி ஓடுகிறது; நல்ல மனிதன்; தீய மிருகம்.-” இவைகளைப் பார்க்கிலும் நமக்குத் தெளிவாக விளங்கக் கூடிய சொற்கள் என்ன இருக்கின்றன? ஆயினும், இந்தச் சொற்களைக் காலத்தையோ, இடத்தையோ துணையாகக் கொண்டு விளக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு மாறாகக் காலத்தையும் இடத்தையும் கொண்டு மிகவும் துல்லியமாக ஒரு பொருளை விளக்கினால், அதுதான் நமக்குப் புரிவதில்லை; எவ்வளவுக் கெவ்வளவு துல்லியமாக விளக்கப்படுகிறதோ அவ்வளவுக் கவ்வளவு புரியாமற் போகிறது. பூமி, சந்திரன், சூரியன் முதலிய கோணங்களைக் கட்டுப்படுத்தும் பூமியின் ஆகர்ஷண சக்தியின் விதியைப் புரிந்து கொண்டு விட்டதாக யாரேனும் சொல்ல முடியுமா? இதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/64&oldid=1122100" இலிருந்து மீள்விக்கப்பட்டது