பக்கம்:வாழ்க்கை.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
58
வாழ்க்கை
 

காலத்தையும் இடத்தையும் ஆதாரமாகக் கொண்டு சூரிய கிரகணம் வருவதை முன்னதாக நிர்ணயித்துச் சொல்லிவிட முடிகின்றது.

நமது சொந்த வாழ்க்கை, நன்மையை அடைவதில் நமக்குள்ள ஆர்வம், அந்த நன்மையை எடுத்துக் காட்டும் அறிவு ஆகியவைகளைத் தவிர நாம் வேறு எதையுமே பூரணமாய்த் தெரிந்து கொள்ளவில்லை. இவைகளுக்கு அடுத்தபடியாக நமது மிருக உடலைப் பற்றியும், அது தன் நலத்தை நாடுவதையும், அறிவின் விதிக்கு அது அடங்கிச் செல்வதையும், நாம் ஓரளவு அறிகிறோம். இது இரண்டாம் படி.

நமது மிருகத் தோற்றத்தைக் காலத்தையும் இடத்தையும் கொண்டு கண்ணால் பார்த்தும், கவனித்தும், ஓரளவுதான் தெரிந்துகொள்கிறோம்; ஆனால், நமது புத்திக்கு அதன் விவரங்கள் அனைத்தும் விளங்கிவிடுவதில்லை. இதற்கு அடுத்தபடியாக மற்ற மனிதர்களைப் பற்றி அறிகிறோம். அவர்களுடைய இயற்கை நம் இயற்கையைப் போல் இருக்கிறது; அவர்களும் நம் உடல்களைப் போன்ற உடல்களைத் தாங்கி நிற்கின்றனர். ஆயினும், அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு தூரம் நம் வாழ்க்கையின் விதிகளை அநுசரித்து வருகின்றனவோ, அதோ அளவுக்குத்தான் அதைப்பற்றித் தெரிந்து கொள்கிறோம். காலத்திலும் இடத்திலும் அதிகமாக வெளிப்படும் வாழ்க்கையைப் பற்றி நாம் மிகக் குறைவாகவே அறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு பெரிய மகானைப் பற்றி நாம் அதிகமாய்த் தெரிந்துகொள்ள முடியும். (அவருடைய பெருமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/65&oldid=1122101" இருந்து மீள்விக்கப்பட்டது