பக்கம்:வாழ்க்கை.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
61
 

தையும் ஆதரவாய்க் கொள்வதால் மட்டும் அறிய முடியாது. நமக்கு உரிய விதிக்கும், பிற பொருள்களை ஆட்சிபுரிந்து வரும் விதிக்கும் ஒற்றுமை யிருப்பதைக் கொண்டே நாம் பொருள்களை ஓரளவு தெரிந்து கொள்ள முடிகிறது.

தூரத்திலுள்ள பொருள்களைப் பார்ப்பது எளிதாகத் தோன்றும் என்பதை மேலே கண்டோம். சடப் பொருள்கள் நம்மிடத்திலிருந்து வெகு தூரத்தில் இருப்பதால், அவைகளை அறிந்து கொள்வது எளிதாகத் தோன்றலாம். அவைகளுக்கு உரிய விதிகள் நம் பார்வைக்கு ஒரே மாதிரியாய்த் தோன்றுவதால், அவைகளை அறிவதில் கஷ்டமே யில்லை என்று எண்ணுகிறோம். மிருகங்களைப் பற்றியும் நாம் இவ்வாறே தவறாக எண்ணுகிறோம். மிருகங்கள் அடங்கி வாழவேண்டிய விதிகள் இருக்கின்றன என்று நாம் பார்க்கிறோமேயன்றி, அந்த விதிகளை உணர்ந்து விட்டதாகச் சொல்ல முடியாது.[1]

நமது பகுத்தறிவு உணர்ச்சி மிருக இயல்பின் மீது ஆதிக்கியம் செலுத்துகிறது. மிருக இயல்பு சடப்பொருளின் மீது ஆதிக்கியம் செலுத்துகிறது மிருக இயல்புக்கும், சடப்பொருளுக்கும் மேலாகப் பகுத்தறிவு உணர்ச்சி விளங்குவதால், அதைக்


  1. பார்ப்பது வேறு; உணர்வது வேறு. பார்ப்பதை யெல்லாம் உணர முடிவதில்லை. மிருகங்களும் சடப் பொருள்களும் ஏதோ விதிகளின்படி நடப்பதைப் பார்க்கிறோம். ஆனால், நம் பகுத்தறிவு உணர்ச்சியை நாம் பார்ப்பதில்லை, ஆயினும். உணர்கிறோம். நாம் ஏன் பார்ப்பதில்லை என்றால், நாமே நமக்கு வெளியில் ஓரிடத்தில் இருந்து கொண்டு நம்மைப் பார்த்துக்கொள்ள இயலாது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/68&oldid=1122108" இருந்து மீள்விக்கப்பட்டது