பக்கம்:வாழ்க்கை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

வாழ்க்கை


கொண்டு மற்ற இரண்டையும் கண்டுகொள்ள முடிகிறது. இதுபோல் பகுத்தறிவு உணர்ச்சிக்கும் மேலான அறிவைப் பெற்றவர்கள் உலகில் இருந்தால், அவர்களே நமது பகுத்தறிவு உணர்ச்சியைப் பற்றி விவரமாகக் கண்டுகொள்ள முடியும்.

மனிதன் மிருக உடலைப் பெற்றிருக்கிறான். அதில் சடப்பொருளும் இருக்கின்றது. இதனால், மனிதனுடைய வாழ்க்கையில் அவை இரண்டின் சம்பந்தங்களும் இருப்பதுபோல் தோன்றுகிறது. இந்தச் சம்பந்தங்களை மிருக வாழ்க்கை, சடவாழ்க்கை என்று சொல்வது தவறு. வாழ்க்கை ஒன்றேதான்-மானிட வாழ்க்கை என்பதிலேயே இவ்விரண்டும் அடங்கியவை. வாழ்க்கை என்ற சொல்லைக் கண்டபடி உபயோகித்தல் ஆகாது. நம் உடலிலேயே எத்தனையோ உயிருள்ள அணுக் கூட்டங்கள் இருக்கின்றன. ஆனால், ஒவ்வோர் அணுவும் வாழ்க்கை நடத்துவதாகக் கூறுவது பொருந்தாது. பகுத்தறிவு உணர்ச்சிக்கு நம் மிருக இயல்பைப் பணிய வைத்து நாம் வாழ்வதே வாழ்க்கை எனத் தக்கது.

மனிதன் தன் உண்மையான வாழ்க்கையைத் தானே அமைத்துக் கொள்கிறான். அவனே அதை வாழ்ந்தாக வேன்டும். மற்றும் அவனோடு சம்பந்தப்பட்டுள்ள உடலும் சடமும் இயங்குவதில் அவன் பங்கெடுத்துக் கொள்வதில்லை. அவை தாமாகவே இயங்கக் கூடியவை. அவைகளுக்குத் தனியான விதிகள் இருக்கின்றன. ஒரு சமயத்தில் மனிதன் அவைகளும் தான் தான் என்று எண்ணியிருக்கலாம். ஆனால் பகுத்தறிவுச் சுடர் ஒளிவிட ஆரம்பித்ததும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/69&oldid=1122109" இலிருந்து மீள்விக்கப்பட்டது