பக்கம்:வாழ்க்கை.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
vi

இத்தகைய கட்டுரைகளில் முக்கியமான ஒன்று ‘வாழ்க்கை’, இது மிகவும் விரிவானது. உலகம், உயிர், உடல், வாழ்வு, மரணம், இன்பம், துன்பம் முதலிய விஷயங்களைப் பற்றி இந்நூலில் விரிவாக ஆராய்ச்சிசெய்யப் பெற்றிருக்கிறது. இது டால்ஸ்டாயின் தனி ஆராய்ச்சி-சமய நூல்கள், புராணங்களிலுள்ள வாக்கியங்களைத் தொகுத்துக் கூறப்பட்டதன்று. ஆசிரியர் தாமாகவே ஆராயாது, உண்மையான மனித வாழ்க்கை எது என்பதை இதில் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

டால்ஸ்டாயின் 81-வருட வாழ்க்கை எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. சிறு வயது முதலே அவருக்குத் தத்துவ ஞானத்தில் பற்றுண்டு. பிறவியிலிருந்தே அவர் கிறிஸ்தவர். ஆனால், பதினாறாவது வயதில் கிறிஸ்தவ மத ஸ்தாபனமான ரஷ்ய சர்ச்சிடம் -அவருக்கிருந்த நம்பிக்கை போய்விட்டது. பின்னர் என்ன என்னவோ ஆராய்ச்சிகள் செய்யத் தொடங்கினார். இறைவனைப் பற்றியும் ஆன்மாவைப் பற்றியும் அவருக்கு அவரும் நம்பிக்கை ஏற்பட்டது. இறுதியாகப் பத்தொன்பதாவது வயதில், அவருக்கு எதிலும் நம்பிக்கையில்லாது போயிற்று. ஆயினும், இருபத்து மூன்றாவது வயதிலிருந்து மறுபடியும் தத்துவ - ஆராய்ச்சியில் அவர் மனம் ஈடுபட்டு வந்தது.

இடையில் சில ஆண்டுகள் அவர் பட்டாளத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இரண்டு பெரிய போர்களில் அவர் நேரில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. பின்னால் போர்த் தொழிலையே வெறுத்து இராணுவத்திலிருந்து வெளியேறினார். மனிதரை மனிதர் அரிந்து தள்ளுவதும், சுட்டு வதைப்பதும் மகா பாவம் என்றும் உலகிலேபோரை ஒழித்துவிட வேண்டும் என்றும் அவர் ஒரு பெரிய பிரசாரப் போரை ஆரம்பித்தார்.

இந்நிலையில் அவர் மறுபடி கிறிஸ்தவ சர்ச்சில் சேரலாம் என்று கருதினார். ஆனால், அக்காலத்தில் ரஷ்யாவில் அந்த ஸ்தாபனம் லேவாதேவிக் கடைபோல் இருந்ததே தவிர, கிறிஸ்துநாதரின் உண்மையான போதனைகளுக்கு அதில் இடமில்லை. ரஷ்யப் புரட்சித் தலைவா லெனின் கூறியிருப்பது போல், பாதிரிமார்கள் நீண்ட அங்கிகள் அணிந்த அரசாங்க உத்தியோகஸ்தர்களாகவும், கிறிஸ்து நாதரின் போலீஸ் படையினராகவும் இருந்தனர். டால்ஸ்டாய் போன்ற அறிஞருக்கும் இவர்களுக்கும் ஒத்துவருமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/7&oldid=1121486" இருந்து மீள்விக்கப்பட்டது