பக்கம்:வாழ்க்கை.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
66
வாழ்க்கை
 

தோடு தீர்ந்துபோகும் என்பதைப் பார்க்கிறான். காலத்தோடும் இடத்தோடும் பொருந்திய வாழ்வு மலைகளும் மடுக்களும் நிறைந்த அபாய வாழ்வு என்பதையும் காண்கிறான். இவைகளை யெல்லாம் கண்டு அவன் நடுக்கமடைந்து, மீண்டும் தரைக்கு வந்து தன் பழைய மிருக வாழ்க்கையிலேயே இருந்துவிட எண்ணுகிறான். ஆனால், அப்படியும் நிலைத்திருக்க முடிவதில்லை. அடிக்கடி அறிவின் தூண்டுதல்கள் ஏற்படுகின்றன. அவைகளை அவன் எப்போதுமே அலட்சியம் செய்ய முடிவதில்லை. மறுபடி உயரிய வாழ்க்கையை விரும்புகிறான். உறுதியுடனும் தைரியத்துடனும் அவன் மேல் நிலையை அடைந்து அதிலிருந்து இறங்கி வராமலே நிற்றல் வேண்டும். நன்மைக்கும் வாழ்க்கைக்கும் இதைத் தவிர வேறு வழியில்லை. உண்மை வாழ்க்கையில் உறுதியான நம்பிக்கை வேண்டும். வாழ்க்கையின் மேடு பள்ளங்களைத் தாண்டி மேலே எழுவதற்கு மனிதனுக்குப் பகுத்தறிவு அளித்துள்ள சிறகுகள் உண்டு. அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, இவன் மேலும் மேலும் பறந்து மேல் நிலைக்குச் செல்வதையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கை என்பது உடலின் வாழ்வுதான் என்று எண்ணிக்கொண்டிருப்பவனுக்கும் இடையிடையே அறிவு உணர்ச்சியின் தூண்டுதல்கள் ஏற்படும். அவன் அவற்றை அசட்டை செய்கிறான். சில சமயங்களில் அத் தூண்டுதல்கள் நினைவுக்கு வரும்போது, அவை எந்த நேரங்களில் ஏற்பட்டன என்பது விளங்காது. அறிவு உணர்ச்சி தனக்கு எப்பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/73&oldid=1122125" இருந்து மீள்விக்கப்பட்டது