பக்கம்:வாழ்க்கை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

69


செய்கிறார்களோ அதே தவறுதலை விஞ்ஞானமும் செய்கிறது.

இந்த இரண்டு கருத்துக்களின் தவற்றுக்கும் காரணம் மிருக வாழ்வையே பகுத்தறிவு உணர்ச்சியென்று கருதி மயங்குதல். பகுத்தறிவு உணர்ச்சியில் உடல் வாழ்வும் அடங்கியதுதான். ஆனால், உடல் வாழ்வில் பகுத்தறிவு உணர்ச்சி அடங்கியிருக்கவில்லை. உடல் பற்றிய தனித் தன்மை விலங்குக்கும் மனிதனுக்கும் பொதுவானது. ஏனெனில், மனிதனும் ஓரளவு மிருக இயல்புடன் இருக்கிறான். ஆனால், பகுத்தறிவு உணர்ச்சி மனிதனுக்கு மட்டுமே உரிய குணம்.

மிருகம் தன் உடலுக்காகவே வாழலாம். அப்படி வாழ்வதை எதுவும் தடை செய்யவில்லை. அது தனி நிலையில் ஏற்படும் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது ; ஆனால், அப்படிச் செய்வதாக அது உணர்வதில்லை; தனக்கு ஒரு தனித் தன்மையிருப்பது கூட அதற்குத் தெரியாது. பகுத்தறிவுள்ள மனிதன் தன் உடலுக்காக மட்டும் வாழ முடியாது. ஏன் முடியாதென்றால், தான் ஆணவமுள்ள தனி மனிதன் என்பதையும், தன்னைப்போல் தனித்தன்மை பெற்ற மனிதர்களும் ஜீவராசிகளும் இருப்பதையும், அவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள சம்பந்தங்களின் விளைவுகளையும் அவன் அறிவான்.

மனிதன் தன் மிருக இயல்பின் நன்மையை மட்டும் நாடுவதானால், அவன் தன்னை மட்டும் நேசிப்பதானால், மற்ற ஜீவன்களும் தங்களை மட்டும் நேசிக்கின்றன என்பதை அறிய முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/76&oldid=1122129" இலிருந்து மீள்விக்கப்பட்டது